*_???முத்தமிழ்???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_ஆடி 15_*
*_31.07.2018_*
*_செவ்வாய்க்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம் :-*
பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். நெருங்கிய நபர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். பணிபுரியும் இடங்களில் உங்களின் கருத்துகளுக்கு மதிப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அசுவினி : மதிப்பு உயரும்.
பரணி : நட்பு வட்டம் பெருகும்.
கிருத்திகை : கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம் :-*
பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்த முயல்வீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களிடம் ஏற்பட்ட பிரச்சனைகள் சரியாகும். சக ஊழியர்களால் சாதகமான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : வீண் செலவுகள் குறையும்.
ரோகிணி : இடமாற்றம் உண்டாகும்.
மிருகசீரிடம் : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம் :-*
மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். கலைகள் மீது ஆர்வம் அதிகரிக்கும். மனைவியுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் குறையும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். செயல்வேகம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மிருகசீரிடம் : புதுவிதமான எண்ணங்கள் தோன்றும்.
திருவாதிரை : கலைகள் மீது ஆர்வம் அதிகரிக்கும்.
புனர்பூசம் : மதிப்பு கூடும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம் :-*
தடைபட்ட வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். பிறரின் வேலைகளையும் சேர்த்து பார்க்க நேரிடும். குடும்ப உறுப்பினர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். எடுத்துச்செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் நிதானம் தேவை.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
புனர்பூசம் : தெளிவு உண்டாகும்.
பூசம் : கனிவுடன் பழகவும்.
ஆயில்யம் : நிதானம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம் :-*
தொழில் நிமிர்த்தமான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் சாதகமான சூழல் அமையும். திறமைக்கேற்ற பாராட்டு கிடைக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கமான விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். வணிகத்தில் எதிர்பார்த்த இலாபமும், ஆதரவும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : சாதகமான நாள்.
பூரம் : பாராட்டு கிடைக்கும்.
உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி :-*
உறவினர்களிடம் பேசும்போது கவனம் வேண்டும். வாகனப் பயணங்களில் நிதானம் தேவை. பணிபுரியும் இடங்களில் பிறரின் அவச்சொல்லிற்கு ஆளாக நேரிடும். வியாபாரம் சம்பந்தமான கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திரம் : பயணங்களில் நிதானம் வேண்டும்.
அஸ்தம் : பணப்புழக்கத்தில் கவனம் தேவை.
சித்திரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம் :-*
திட்டமிட்ட பணிகளை விடாப்பிடியாக செயல்பட்டு செய்து முடிப்பீர்கள். எதிர்காலம் சம்பந்தமான பணிகளை மேற்கொள்வீர்கள். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். நண்பர்களிடம் தேவையற்ற வாதத்தை தவிர்க்கவும். பூர்வீகச் சொத்து சம்பந்தமாக ஏற்பட்ட இன்னல்கள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
சித்திரை : எண்ணங்கள் ஈடேறும்.
சுவாதி : அனுசரித்து செல்லவும்.
விசாகம் : வாதத்தை தவிர்க்கவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம் :-*
சாமர்த்தியமான பேச்சுகளால் எண்ணிய வேலைகளை செய்து முடிப்பீர்கள். பொதுக்கூட்ட பேச்சுகளில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். மற்றவர்கள் கேட்ட உதவியை செய்து கொடுப்பீர்கள். மனைகள் மூலம் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். வியாபாரத்தில் உங்கள் மீதான நம்பிக்கை உயரும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
விசாகம் : ஆதரவு கிடைக்கும்.
அனுஷம் : இலாபம் உண்டாகும்.
கேட்டை : நம்பிக்கை அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு :-*
உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். திருமணப் பேச்சு வார்த்தைகள் சாதகமாக அமையும். பணிபுரியும் இடங்களில் உங்களின் திறமைகள் வெளிப்படும். வேலையாட்களின் மூலம் ஆதாயம் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் தடைபட்ட செயல்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்
மூலம் : மகிழ்ச்சி உண்டாகும்.
பூராடம் : திறமைகள் வெளிப்படும்.
உத்திராடம் : ஆதாயம் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம் :-*
கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். பணி நிமிர்த்தமான பயணங்களால் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்து வந்த சிக்கல்கள் குறையும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திராடம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.
திருவோணம் : அனுகூலமான சூழல் அமையும்.
அவிட்டம் : சிக்கல்கள் குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம் :-*
உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். கௌரவ பதவிகளால் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களின் மூலம் தொழிலில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : கிளிப்பச்சை
அவிட்டம் : வாய்ப்புகள் அமையும்.
சதயம் : உயர் பதவிகளால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
பூரட்டாதி : சாதகமான பலன்கள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம் :-*
பணிபுரியும் இடங்களில் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். அக்கம், பக்கம் வீட்டார்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பழைய கடன்களை அடைப்பதற்கான எண்ணங்கள் மேலோங்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் ஏற்பட்ட இடர்பாடுகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
பூரட்டாதி : மனக்கசப்புகள் நீங்கும்.
உத்திரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
ரேவதி : இடர்பாடுகள் குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
