~~~~முத்தமிழ் ~~~~
?இன்றைய ராசிபலன்கள்?
? செவ்வாய்?24.07.2018?விளம்பி − ஆடி.8.
⚡மேஷம்
கடிதத்தின் மூலம் சாதகமான செய்திகள் கிடைக்கும். கால்நடைகளிடம் கவனம் தேவை. வாகனப் பயணங்களால் சாதகமான செய்திகள் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். உறவினர்களுக்கிடையே ஏற்பட்ட மன வருத்தங்கள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
அசுவினி : முயற்சிகள் கைகூடும்.
பரணி : சாதகமான நாள்.
கிருத்திகை : வெற்றி கிடைக்கும்.
⚡ரிஷபம்
அரசாங்கத்திடமிருந்து அனுகூலமான தகவல்கள் வந்தடையும். சொத்துச்சேர்க்கை உண்டாகும். மந்தத்தன்மையால் பணியில் சாதகமற்ற சூழல் உண்டாகும். விலையுயர்ந்த பொருட்களை கையாளும்போது எச்சரிக்கை வேண்டும். எண்ணிய கடனுதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
கிருத்திகை : அனுகூலமான தகவல்கள் கிடைக்கும்.
ரோகிணி : எச்சரிக்கையுடன் செயல்படவும்.
மிருகசீரிஷம் : சாதகமற்ற சூழல் உண்டாகும்.
⚡மிதுனம்
இழந்த பொருட்களை மீட்பதற்கான தன உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வேளாண்மையில் ஏற்பட்ட தேக்க நிலை நீங்கும். இறைபணிக்காக நன்கொடைகளை கொடுத்து மனம் மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மிருகசீரிஷம் : எண்ணங்கள் மேலோங்கும்.
திருவாதிரை : புதிய நட்பு கிடைக்கும்.
புனர்பூசம் : மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
⚡கடகம்
செய்யும் வேலைகளில் கவனம் தேவை. வெளியூர் வேலைவாய்ப்புகள் எண்ணிய பலனை தரும். பெரியோர்களின் ஆதரவினால் பூர்வீகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பயணங்களில் எச்சரிக்கையுடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : பிரச்சனைகள் குறையும்.
பூசம் : அனுகூலமான நாள்.
ஆயில்யம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
⚡சிம்மம்
வாக்குறுதிகளை காப்பாற்றியதால் கீர்த்தி உண்டாகும். உயர் பதவியை பெறுவதற்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர்களுடன் விருந்தில் கலந்து கொள்வீர்கள். புனித யாத்திரை செல்வதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மகம் : கீர்த்தி உண்டாகும்.
பூரம் : புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்திரம் : மகிழ்ச்சி அடைவீர்கள்.
⚡கன்னி
தொழில் சார்ந்த முயற்சிகளால் தனலாபம் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். இறைவழிபாட்டால் மகிழ்ச்சி உண்டாகும். விவாதங்களில் எச்சரிக்கையுடன் செயல்படவும். மனைகளால் இலாபம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : தனலாபம் கிடைக்கும்.
அஸ்தம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
சித்திரை : மகிழ்ச்சி அடைவீர்கள்.
⚡துலாம்
வாகனப் பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். புதிய முயற்சிகளால் சேமிப்பு உயரும். மனக்கவலைகள் குறைவதற்கான சூழல் அமையும். பதவி உயர்வால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பணிகளில் உள்ளவர்களுக்கு மேன்மையான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
சித்திரை : புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.
சுவாதி : மனமகிழ்ச்சி உண்டாகும்.
விசாகம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
⚡விருச்சிகம்
வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். அந்நியர்களால் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். மனைவியிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பார்த்த உதவிகளால் இலாபம் அதிகரிக்கும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். கடல் மார்க்க பயணங்களால் அனுகூலமான செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்
விசாகம் : இலாபம் கிடைக்கும்.
அனுஷம் : பொருளாதார மேன்மை உண்டாகும்.
கேட்டை : தொழிலில் உங்களின் திறமை வெளிப்படும்.
⚡தனுசு
கூட்டாளிகளிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சாதுர்யமான பேச்சுகளால் பாராட்டப்படுவீர்கள். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். தூர தேச பயணங்களில் ஏற்பட்ட சிக்கல்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மூலம் : கீர்த்தி உண்டாகும்.
பூராடம் : ஆசிகள் கிடைக்கும்.
உத்திராடம் : சங்கடங்கள் குறையும்.
⚡மகரம்
தைரியம் மற்றும் நிதானத்துடன் மனதில் எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். விளையாட்டு வீரர்களுக்கு சாதகமான நாள். புதிய உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். செய்யும் வேலைகளில் கவனமாக இருக்கவும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
உத்திராடம் : நிதானத்துடன் செயல்படவும்.
திருவோணம் : காரியசித்தி உண்டாகும்.
அவிட்டம் : பணிகளில் கவனம் தேவை.
⚡கும்பம்
புதிய சிந்தனைகள் மேலோங்கும். தாய் வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். போட்டிகளில் ஈடுபடும்போது கவனமாக இருக்க வேண்டும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். கடல் மார்க்க பயணங்களால் இலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : கவனமாக இருக்கவும்.
சதயம் : உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.
பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
⚡மீனம்
புத்திரர்களின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். நிர்வாகத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். பொதுக்கூட்டப் பேச்சுகளில் ஈடுபடுபவர்களுக்கு மக்களின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
பூரட்டாதி : சுபச் செய்திகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : புத்திக்கூர்மை வெளிப்படும்.
ரேவதி : மக்களின் ஆதரவு கிடைக்கும்.
????????????????????????
