*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_புரடாசி 02_*

*_18.09.2018_*
*_செவ்வாய்க்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம் :-*

புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் வந்தடையும். உடல்நலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி நலம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் சாதகமாக நடந்து கொள்வார்கள். பொருளாதார மேன்மை உண்டாகும். போட்டிகளில் ஈடுபட்டு பரிசுகளைப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

அசுவினி : மகிழ்ச்சியான நாள்.
பரணி : சாதகமான நாள்.
கிருத்திகை : நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம் :-*

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சுபச் செய்திகள் வந்தடையும். வீண் அலைச்சல்கள் உண்டாகும். பணியில் உள்ளவர்களுக்கு வீண் கவலைகள் தோன்றும். செயல்பாடுகளில் கவனம் வேண்டும். தாய்மாமன் ஆதரவு கிடைக்கும். போட்டி, பந்தயங்களில் சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : அலைச்சல்கள் உண்டாகும்.
ரோகிணி : செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.
மிருகசீரிடம் : கவலைகள் தோன்றும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம் :-*

நண்பர்களின் மூலம் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். அரசு அதிகாரிகளால் சாதகமான சூழல் அமையும். எந்தவொரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். நண்பர்களுடன் கூடிப்பேசி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மிருகசீரிடம் : தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்.
திருவாதிரை : எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும்.
புனர்பூசம் : வெற்றி கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம் :-*

மூத்த சகோதரர்களிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். வாக்குவன்மையால் பெருமை அடைவீர்கள். நிர்வாகத்தில் சாதகமான சூழல் அமையும். வெளிநாட்டு பயணங்களால் கீர்த்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

புனர்பூசம் : ஆரோக்கிய குறைகள் நீங்கும்.
பூசம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
ஆயில்யம் : திறமைகள் வெளிப்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம் :-*

அரசாங்கத்திடமிருந்து அனுகூலமான செய்திகள் வந்தடையும். நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பிற்கான முயற்சிகள் ஈடேறும். சவாலான பணிகளில் ஈடுபட்டு அனைவராலும் புகழப்படுவீர்கள். ஆபரணச் சேர்க்கைக்கான செயல்திட்டத்தை தீட்டுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : அனுகூலமான செய்திகள் கிடைக்கும்.
பூரம் : முயற்சிகள் ஈடேறும்.
உத்திரம் : பாராட்டுகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி :-*

கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் அடைவீர்கள். தொழிலில் மேன்மையான சூழல் உண்டாகும். தாயின் ஆதரவினால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

உத்திரம் : இலாபம் அடைவீர்கள்.
அஸ்தம் : மேன்மையான சூழல் உண்டாகும்.
சித்திரை : புத்துணர்ச்சி அடைவீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம் :-*

தன்னம்பிக்கையுடன் எல்லா காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். கடிதத்தின் மூலம் அனுகூலமான சூழல் ஏற்படும். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும். உடல் நலத்திற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாட்களாக உள்ள பிரச்சனைகளை சுமூகமாக முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

சித்திரை : அனுகூலமான நாள்.
சுவாதி : தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.
விசாகம் : மனக்கவலைகள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம் :-*

புதிய இலக்கை நிர்ணயம் செய்து அதன் மூலம் இலாபம் அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் குறைந்து அன்பு அதிகரிக்கும். பொருளாதார மேன்மைக்கான செயல்பாடுகள் எண்ணிய பலனை தரும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : இலாபம் அடைவீர்கள்.
அனுஷம் : அன்பு அதிகரிக்கும்.
கேட்டை : மேன்மையான சூழல் அமையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு :-*

வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். பாதியில் நின்ற வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மூலம் : புதிய திட்டங்களை தீட்டுவீர்கள்.
பூராடம் : வேலைகள் சிறப்பாக முடியும்.
உத்திராடம் : அலைச்சல்கள் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம் :-*

பிள்ளைகளின் மூலம் சுப விரயம் ஏற்படும். வெளிநாட்டு வேலைக்கான முயற்சிகள் ஈடேறும். உயர்கல்விக்கான முயற்சிகள் எதிர்பார்த்த பலனை தரும். பூர்வீக சொத்துகளால் நன்மை உண்டாகும். வேள்விகளில் கலந்து கொண்டு மந்திர உபதேசம் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திராடம் : சுப விரயம் ஏற்படும்.
திருவோணம் : சொத்துகளால் நன்மை உண்டாகும்.
அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம் :-*

உறவினர்களிடம் சாதகமான சூழல் அமையும். பொது நலத்திற்கான செயல்பாடுகளில் ஈடுபடுவீர்கள். அனைவரிடத்திலும் உங்களின் மதிப்பு கூடும். கௌரவ பதவிகள் வந்தடையும். தந்தை வழி சொத்துகளில் இருந்த சிக்கல்கள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அவிட்டம் : பொதுச்சேவைகளில் நாட்டம் அதிகரிக்கும்.
சதயம் : மதிப்பு கூடும்.
பூரட்டாதி : சிக்கல்கள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈

*☸மீனம் :-*

தொழில் சார்ந்த புதிய எண்ணங்கள் மேலோங்கும். மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். கலை சார்ந்த அறிவுகள் மேம்படும். ஆன்மீக வழிபாட்டில் மனம் ஈடுபடும். வெளித்தொடர்புகளால் நன்மை கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : எண்ணங்கள் மேலோங்கும்.
உத்திரட்டாதி : புத்திக்கூர்மை வெளிப்படும்.
ரேவதி : நன்மைகள் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•