*_???முத்தமிழ்???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_ஆனி 27_*

*_11.07.2018_*
*_புதன்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம் :-*

புதிய வேலை தேடுபவர்களுக்கு வீண் அலைச்சல்கள் உண்டாகும். எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். சொந்த ஊருக்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசும்போது கவனத்துடன் பேசவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : அலைச்சல்கள் உண்டாகும்.
பரணி : நிதானம் வேண்டும்.
கிருத்திகை : பயணங்களை மேற்கொள்வீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம் :-*

கடல் மார்க்க பயணங்களால் இலாபகரமான செய்திகள் வந்தடையும். பொதுத் தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். கூட்டாளிகளிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். தர்ம ஸ்தாபனங்களில் இருந்து சுபச் செய்திகள் வரும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

கிருத்திகை : இலாபம் உண்டாகும்.
ரோகிணி : ஆதரவு கிடைக்கும்.
மிருகசீரிடம் : சுபச் செய்திகள் வரும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம் :-*

பொது நலத்திற்கான செயல்பாடுகளில் ஈடுபடுவீர்கள். அனைவரிடத்திலும் உங்களின் மதிப்பு கூடும். தந்தை வழி சொத்துகளில் இருந்த சிக்கல்கள் குறையும். நீண்ட நாட்களாக உள்ள பிரச்சனைகளை நிதானத்துடன் கையாண்டு சுமூகமாக தீர்ப்பீர்கள். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மயில்நீலம்

மிருகசீரிடம் : மதிப்பு கூடும்.
திருவாதிரை : சிக்கல்கள் குறையும்.
புனர்பூசம் : புத்துணர்ச்சி அடைவீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம் :-*

தொழில் ரீதியாக முக்கியமான பிரதிநிதிகளின் ஆதரவு கிடைக்கும். நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பிற்கான உங்களது முயற்சிகள் ஈடேறும். ஆபரணச் சேர்க்கைக்கான செயல்திட்டத்தை வகுப்பீர்கள். நண்பர்களின் மூலம் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். கூட்டுத்தொழிலில் உள்ளவர்களுக்கு பொருளாதார மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.
பூசம் : முயற்சிகள் ஈடேறும்.
ஆயில்யம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம் :-*

வேலை தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் கிடைக்கும். உடல்நலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி நலம் உண்டாகும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு வேலைப்பளுவினால் மேன்மையான சூழல் உண்டாகும். சொத்துப் பிரிவினையின்போது பங்காளிகளிடம் அமைதியை கடைபிடிக்கவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மகம் : ஆரோக்கியம் மேம்படும்.
பூரம் : உதவிகள் கிடைக்கும்.
உத்திரம் : அமைதி வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி :-*

அரசு அதிகாரிகளின் மூலம் சாதகமான நிலை ஏற்படும். பூர்வீக சொத்துகளால் இலாபம் அடைவீர்கள். நீங்கள் செய்யும் உன்னத செயல்களால் நற்பெயர் ஏற்படும். பிள்ளைகளின் மூலம் சுப விரயம் உண்டாகும். உயர்கல்விக்கான முயற்சிகள் சாதகமான பலன்களை தரும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : சாதகமான நாள்.
அஸ்தம் : இலாபம் அடைவீர்கள்.
சித்திரை : சுப விரயம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம் :-*

சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். பொருளாதார மேன்மை உண்டாகும். போட்டிகளில் ஈடுபட்டு பரிசுகளை பெறுவீர்கள். தாயிடம் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்க்கவும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையை கடைபிடிக்கவும். கல்வி சம்பந்தப்பட்ட கலந்துரையாடலில் கலந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

சித்திரை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
சுவாதி : மேன்மை உண்டாகும்.
விசாகம் : பரிசுகள் பெறுவீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம் :-*

கடிதத்தின் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். எண்ணிய செயல்கள் ஈடேறுவதில் மந்தத்தன்மை உண்டாகும். இளைய சகோதரர்களின் வழியில் சுபச் செய்திகள் வரும். புதிய தொழிலை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

விசாகம் : அனுகூலமான நாள்.
அனுஷம் : மந்தத்தன்மை உண்டாகும்.
கேட்டை : சுபச் செய்திகள் வரும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு :-*

புதிய நபர்களின் ஆதரவால் தனவரவு கிடைக்கும். வாக்குவன்மையால் பொருட்சேர்க்கை உண்டாகும். வாகனங்களை கொண்டு தொழில் புரிபவர்களுக்கு எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே உள்ள வேற்றுமை நீங்கி ஒற்றுமை மேலோங்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மூலம் : தனவரவு உண்டாகும்.
பூராடம் : ஆதரவு கிடைக்கும்.
உத்திராடம் : ஒற்றுமை மேலோங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம் :-*

தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். தன்னம்பிக்கையுடன் எல்லா காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தரர்கள் உடன் பணிபுரியும் சக ஊழியர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். செயல்பாடுகளில் சிறிது கவனம் வேண்டும். தொழிலில் மேன்மையான சூழல் உண்டாகும். பணியில் உள்ளவர்களுக்கு வீண் கவலைகள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : எண்ணங்கள் மேலோங்கும்.
திருவோணம் : அமைதியை கடைபிடிக்கவும்.
அவிட்டம் : மேன்மையான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம் :-*

வேள்விகளில் கலந்துகொண்டு மந்திர உபதேசம் பெறுவீர்கள். அரசாங்கத்திடமிருந்து அனுகூலமான செய்திகள் வரும். சவாலான பணிகளில் ஈடுபட்டு அனைவராலும் புகழப்படுவீர்கள். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வங்கிகளில் எதிர்பார்த்த சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

அவிட்டம் : உபதேசம் பெறுவீர்கள்.
சதயம் : புகழப்படுவீர்கள்.
பூரட்டாதி : மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம் :-*

ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். வெளிநாட்டு பயணங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். புதிய நபர்களின் வரவால் பொருளாதாரம் மேம்படும். புண்ணிய காரியங்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். எதிலும் நிதானம் வேண்டும். எதிர்பார்த்த இடத்திலிருந்து கிடைக்க வேண்டிய கடனுதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

பூரட்டாதி : பயணங்களால் இலாபம் உண்டாகும்.
உத்திரட்டாதி : எண்ணங்கள் ஈடேறும்.
ரேவதி : பொருளாதாரம் மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•