*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_புரடாசி 19_*

*_05.10.2018_*
*_வெள்ளிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம் :-*

உத்தியோகம் சார்ந்த சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான மாற்றங்களை செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

அசுவினி : புதிய மாற்றங்களை செய்வீர்கள்.
பரணி : மனக்கசப்புகள் நீங்கும்.
கிருத்திகை : பயணங்களில் கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம் :-*

புதிய நபர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். பிள்ளைகளிடம் கனிவுடன் பழகவும். உறவினர்களின் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் உங்களின் மதிப்பு கூடும். சகோதர வகையில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

கிருத்திகை : நிதானம் வேண்டும்.
ரோகிணி : கனிவுடன் பழகவும்.
மிருகசீரிடம் : மதிப்பு கூடும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம் :-*

வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் மூலம் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். வெளிநாடுகளுக்கான பயணங்களால் நன்மை கிடைக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்க செயல்திட்டம் தீட்டுவீர்கள். நீண்ட நாட்களாக மனதில் நினைத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும். புதுவித ஆராய்ச்சி எண்ணங்கள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மிருகசீரிடம் : இலாபம் கிடைக்கும்.
திருவாதிரை : பயணங்களால் நன்மை உண்டாகும்.
புனர்பூசம் : உறவு மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம் :-*

நிர்வாகத்தில் உங்களின் தனித்திறமைகள் வெளிப்படும். நண்பர்களின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும். எதிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு இலாபம் மற்றும் மகிழ்ச்சி அடைவீர்கள். புதிய ஆராய்ச்சி சம்பந்தமான தேடல் உருவாகும். எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். தொழில் சார்ந்த அலைச்சல்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : திறமைகள் வெளிப்படும்.
பூசம் : மகிழ்ச்சி அடைவீர்கள்.
ஆயில்யம் : ஆராய்ச்சி சம்பந்தமான தேடல் உருவாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம் :-*

கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். உறவினர்களிடம் உங்களின் மதிப்பு கூடும். வாகனப் பழுதுகளை சரிசெய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு சக ஊழியர்களால் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மகம் : முன்னேற்றம் உண்டாகும்.
பூரம் : மதிப்பு அதிகரிக்கும்.
உத்திரம் : இலாபம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி :-*

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். வியாபாரத்தில் அதிரடியான மாற்றங்களை செய்வீர்கள். சுயதொழில் சம்பந்தமான முயற்சிகள் மேலோங்கும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். உடல் ஆரோக்கியம் மேம்படும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். மனக்கவலைகள் குறைந்து மகிழ்வுடன் காணப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
அஸ்தம் : மாற்றங்கள் உண்டாகும்.
சித்திரை : ஆரோக்கியம் மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம் :-*

பொருள் சேர்ப்பதற்கு சாதகமான நிலை உண்டாகும். புதிய தொழில் முயற்சிகளால் சுப விரயம் உண்டாகும். இறை வழிபாட்டை மேற்கொள்வீர்கள். தொழில் சம்பந்தமான புதிய முடிவுகளை எடுப்பதில் கவனத்துடன் செயல்படவும். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். புதிய நபர்களுடன் வாக்குவாதத்தை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

சித்திரை : சாதகமான நாள்.
சுவாதி : முடிவுகளில் கவனம் தேவை.
விசாகம் : அனுசரித்துச் செல்லவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம் :-*

பொருட்களை கையாளும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும். செய்யும் வேலைகளில் கவனம் வேண்டும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். வருங்காலம் சார்ந்த பணிகளை மேற்கொள்வீர்கள். மகான்களின் ஆசிகள் கிடைக்கும். ஆடைச்சேர்க்கை உண்டாகும். வெளிவட்டாரங்களில் உங்களின் செல்வாக்கு உயரும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : எச்சரிக்கை தேவை.
அனுஷம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
கேட்டை : ஆசிகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு :-*

பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். புனித யாத்திரை செல்வதற்கான சூழல் அமையும். பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான சூழல் அமையும். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். செயல்களில் இழுபறியான நிலை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : கீர்த்தி உண்டாகும்.
பூராடம் : உயர்வு உண்டாகும்.
உத்திராடம் : சிந்தித்து செயல்படவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம் :-*

உயர் அதிகாரிகளிடம் அமைதியுடன் செயல்படவும். வர்த்தகம் சம்பந்தமான வியாபாரங்களில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். விளையாட்டு வீரர்கள் கவனத்துடன் செயல்படவும். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். குடும்பம் சார்ந்த முக்கிய முடிவுகளில் நிதானத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திராடம் : அமைதியை கடைபிடிக்கவும்.
திருவோணம் : கவனத்துடன் செயல்படவும்.
அவிட்டம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம் :-*

உயர் அதிகாரிகளிடமிருந்து அனுகூலமான செய்திகள் வரும். போட்டிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பழைய பிரச்சனைகளால் ஒருவிதமான பதற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் தோன்றி மறையும். தடைகளைத் தாண்டி வெற்றி காண்பீர்கள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

அவிட்டம் : அனுகூலமான செய்திகள் கிடைக்கும்.
சதயம் : வெற்றி காண்பீர்கள்.
பூரட்டாதி : பதற்றம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம் :-*

தடைபட்ட பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் முயற்சிக்கேற்ற புதிய வாய்ப்புகள் அமையும். அறிவாற்றலும், செயல்திறமையும் மேம்படும். வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். உறவினர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : புதிய வாய்ப்புகள் அமையும்.
உத்திரட்டாதி : செயல்திறமை மேம்படும்.
ரேவதி : ஆதாயம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈