*_???முத்தமிழ்???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_ஆடி 19_*

*_04.08.2018_*
*_சனிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம் :-*

வியாபாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். உடல் சோர்வு நீங்கும். உத்தியோகஸ்தரர்கள் மேலதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. செய்தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வாடிக்கையாளர்களிடம் தேவையற்ற வாதங்களை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அசுவினி : இன்னல்கள் நீங்கும்.
பரணி : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
கிருத்திகை : வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம் :-*

உத்தியோகஸ்தரர்களுக்கு மூத்த அதிகாரிகளின் ஆலோசனைகள் கிடைக்கும். மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். வாகனத்தில் உள்ள பழுதுகளை சரிசெய்வீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

கிருத்திகை : ஆலோசனைகள் கிடைக்கும்.
ரோகிணி : மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்.
மிருகசீரிடம் : அங்கீகாரம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம் :-*

எதிர்பார்த்த இடத்திலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கும். உங்களின் உதவியால் மற்றவர்கள் பயனடைவார்கள். செய்தொழிலில் சில மாற்றங்களை செய்வீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான நவீன சாதனங்களை வாங்குவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

மிருகசீரிடம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
திருவாதிரை : கீர்த்தி உண்டாகும்.
புனர்பூசம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம் :-*

புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் பிறக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு சாதகமான சூழல் அமையும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில செயல்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : வெற்றி உண்டாகும்.
பூசம் : சாதகமான நாள்.
ஆயில்யம் : காரியசித்தி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம் :-*

தொழிலில் பழைய பங்குதாரரை மாற்றி புதியவரின் நட்பால் மகிழ்ச்சி அடைவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் குறையும். பழைய நினைவுகளால் கவலைகள் உண்டாகும். உங்களின் திறமைகள் வெளிப்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மகம் : புதிய நட்பால் மகிழ்ச்சியடைவீர்கள்.
பூரம் : எதிர்ப்புகள் குறையும்.
உத்திரம் : திறமைகள் வெளிப்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி :-*

சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். மற்றவர்களின் பிரச்சனையில் தலையிடுவதால் வீண் பழிச்சொல் ஏற்படக்கூடும். தனவரவு கிடைக்க காலதாமதமாகும். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிலும் சிந்தித்து செயல்படுவது நன்மை தரும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

உத்திரம் : அமைதியை கடைபிடிக்கவும்.
அஸ்தம் : கவனம் தேவை.
சித்திரை : சிந்தித்து செயல்படவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம் :-*

சொத்துப் பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். நீண்ட நாட்களாக தடைபட்ட செயல்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். நிதானத்துடன் செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

சித்திரை : சுமூகமான தீர்வு கிடைக்கும்.
சுவாதி : இலாபம் கிடைக்கும்.
விசாகம் : நிதானமாக செயல்படவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம் :-*

தொழில் முனைவோர்க்கு போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை பகிர வேண்டாம். குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத செலவுகளால் சேமிப்பு குறையும். தொழிலில் புதிய நபர்களின் நட்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

விசாகம் : போட்டிகள் அதிகரிக்கும்.
அனுஷம் : அனுசரித்துச் செல்லவும்.
கேட்டை : சேமிப்பு குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு :-*

குடும்பத் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில் சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிஸ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மூலம் : எண்ணங்கள் ஈடேறும்.
பூராடம் : அனுகூலமான நாள்.
உத்திராடம் : தன்னம்பிக்கை மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம் :-*

பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வழக்குகளில் சாதகமான தீர்வு கிடைக்கும். நினைத்த பணியை முழு மனதுடன் நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

உத்திராடம் : ஆசைகள் நிறைவேறும்.
திருவோணம் : நண்பர்களின் உதவி கிடைக்கும்.
அவிட்டம் : திருப்தியான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம் :-*

உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உறவினர்களால் வீண் செலவுகள் உண்டாகும். மனதிற்கு பிடித்த பழைய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்களைப் பற்றி புரிந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் :
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.
சதயம் : பழைய அனுபவத்தால் மகிழ்ச்சி உண்டாகும்.
பூரட்டாதி : புரிதல் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம் :-*

வெளியூரிலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கும். தொழிலில் சில மாற்றங்களை செய்வீர்கள். நம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பணியில் இருந்து வந்த சில இடையூறுகள் விலகும். குடும்ப சூழ்நிலையை மற்றவர்களிடம் பகிராமல் இருப்பது நல்லது. வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

பூரட்டாதி : சுபச் செய்திகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : தொழிலில் சில மாற்றங்களை செய்வீர்கள்.
ரேவதி : நிதானத்துடன் செயல்படுவது நல்லது.

•┈┈•❀??????❀•┈┈•