*_???முத்தமிழ்???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_ஆவணி 07_*

*_23.08.2018_*
*_வியாழக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம் :-*

பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புனித யாத்திரை செல்வதற்கான சூழல் அமையும். அரசு அதிகாரிகளிடமிருந்து அனுகூலமான செய்திகள் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : கீர்த்தி உண்டாகும்.
பரணி : ஆசைகள் நிறைவேறும்.
கிருத்திகை : பதவி உயர்வு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம் :-*

குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். மகான்களின் ஆசிகள் கிடைக்கும். ஆடைச்சேர்க்கை உண்டாகும். வெளிவட்டாரங்களில் உங்களின் செல்வாக்கு உயரும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். திருமணப்பேச்சு வார்த்தைகள் கைகூடும். மனைகளால் இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

கிருத்திகை : ஒற்றுமை மேலோங்கும்.
ரோகிணி : ஆசிகள் கிடைக்கும்.
மிருகசீரிடம் : செல்வாக்கு உயரும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம் :-*

பொருட்களை கையாளும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும். உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் உயரும். செய்யும் வேலைகளில் கவனம் வேண்டும். எதிர்காலம் சம்பந்தமான திட்டம் ஒன்று நிறைவேறும். உங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிடம் : நிதானம் வேண்டும்.
திருவாதிரை : பொறுப்புகள் உயரும்.
புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம் :-*

கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். மனைவி வழி உறவினர்களிடம் உங்களின் மதிப்பு கூடும். வாகனத்தில் உண்டான பழுதுகளை சரிசெய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டாகும். உத்தியோகத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

புனர்பூசம் : முன்னேற்றம் உண்டாகும்.
பூசம் : மகிழ்ச்சியான நாள்.
ஆயில்யம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம் :-*

தொழில் சம்பந்தமான சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பேச்சில் தெளிவு பிறக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு அதிகாரிகளுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : தெளிவு பிறக்கும்.
பூரம் : புதிய திட்டங்களை தீட்டுவீர்கள்.
உத்திரம் : மனக்கசப்புகள் நீங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி :-*

புதிய நபர்களிடம் தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்க்கவும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். வாகன வசதி பெருகும். பிள்ளைகள் உங்களின் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வாக்குறுதிகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திரம் : விவாதங்களை தவிர்க்கவும்.
அஸ்தம் : வாகன வசதி பெருகும்.
சித்திரை : இன்னல்கள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம் :-*

தொழிலில் புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். உடன்பிறந்தவர்களிடம் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கும். வெளிநாட்டு பயணங்களால் நன்மை கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாட்களாக மனதில் நினைத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

சித்திரை : பொருட்சேர்க்கை உண்டாகும்.
சுவாதி : மனவருத்தங்கள் நீங்கும்.
விசாகம் : காரியசித்தி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம் :-*

நிர்வாகத்தில் உங்களின் தனித்திறமைகள் வெளிப்படும். நண்பர்களின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். எதிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு இலாபம் அடைவீர்கள். புதிய ஆராய்ச்சி சம்பந்தமான தேடல் உருவாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க காலதாமதமாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : தனித்திறமைகள் வெளிப்படும்.
அனுஷம் : புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
கேட்டை : புதிய தேடல் உருவாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு :-*

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பழைய கடனை அடைப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும். புதுவிதமான ஆராய்ச்சி எண்ணங்கள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : மகிழ்ச்சியான நாள்.
பூராடம் : புதிய திட்டங்களை தீட்டுவீர்கள்.
உத்திராடம் : உறவு மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம் :-*

சுயதொழில் சம்பந்தமான முயற்சிகள் மேலோங்கும். தொழில் சம்பந்தமான புதிய முடிவுகளை எடுப்பதில் கவனத்துடன் இருக்கவும். சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். புதிய நபர்களுடன் வாக்குவாதத்தை தவிர்க்கவும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : முயற்சிகள் மேலோங்கும்.
திருவோணம் : முடிவுகளில் நிதானம் வேண்டும்.
அவிட்டம் : புதுவிதமான எண்ணங்கள் தோன்றும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம் :-*

மனக்கவலைகள் குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். புதிய தொழில் முயற்சிகளால் சுப விரயம் ஏற்படும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொருட்சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அவிட்டம் : மனக்கவலைகள் குறையும்.
சதயம் : சுப விரயம் உண்டாகும்.
பூரட்டாதி : நட்பு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம் :-*

குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதங்களை தவிர்த்து அமைதியுடன் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். வாகனப் பயணங்களில் மிகுந்த எச்சரிக்கை வேண்டும். போட்டிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

பூரட்டாதி : அமைதியுடன் செயல்படவும்.
உத்திரட்டாதி : மேன்மை உண்டாகும்.
ரேவதி : வெற்றி கிடைக்கும்.

  1. •┈┈•❀??????❀•┈┈•