*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_மார்கழி 06_*

*_21.12.2018_*
*_வெள்ளிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்*

உயர் அதிகாரிகளால் எதிர்பார்த்த காரியங்கள் ஈடேறும். உறவினர்களிடமிருந்து சுபச் செய்திகள் கிடைக்கும். பேச்சில் இனிமை அதிகரிக்கும். வியாபாரத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : அனுகூலமான நாள்.
பரணி : இன்பமான நாள்.
கிருத்திகை : ஆதாயம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்*

புதிய முயற்சிகள் சார்ந்த அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும். எனவே கவனம் தேவை. தாய் பற்றிய கவலைகள் மேலோங்கும். முயற்சிக்கேற்ற சாதகமான பலன்கள் கிடைக்கும். தொழில் தொடர்பான வழக்குகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடன்பிறப்புகளிடம் நிதானமாக இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
ரோகிணி : கவலைகள் மேலோங்கும்.
மிருகசீரிடம் : நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்*

வியாபாரத்தில் வருவாய் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். மற்றவர்களிடம் பேசும்போதும், வாக்குறுதிகள் அளிக்கும் போதும் கவனம் வேண்டும். வீண் அலைச்சல்கள் உண்டாகும். சக ஊழியர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிடம் : வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள்.
திருவாதிரை : எண்ணங்கள் ஈடேறும்.
புனர்பூசம் : அனுசரித்துச் செல்லவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்*

மனதில் நினைத்த எண்ணங்கள் ஈடேறும். முயற்சிகள் கைக்கூடும். மனோ தைரியம் அதிகரிக்கும். எதையும் சாதிக்கும் திறன் மேம்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் பணிச்சுமை குறையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

புனர்பூசம் : முயற்சிகள் கைக்கூடும்.
பூசம் : திறமைகள் வெளிப்படும்.
ஆயில்யம் : ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்*

தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். நண்பர்களிடம் நிதானமாக பேசுவது நன்மை தரும். வேலை தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் கிடைக்கும். மேலதிகாரிகளிடம் பேசும்போது நிதானம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

மகம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்
பூரம் : கனிவு வேண்டும்.
உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். தந்தையின் உடல்நலனில் இருந்த பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்

உத்திரம் : அன்பு அதிகரிக்கும்.
அஸ்தம் : இன்னல்கள் குறையும்.
சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். தொழில் சார்ந்த பயணங்களும் அலைச்சல்களும் உண்டாகும். செய்யும் செயல்களில் காலதாமதம் உண்டாகும். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. இறை வழிபாடு மனதிற்கு நிம்மதி தரும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

சித்திரை : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
சுவாதி : காலதாமதம் உண்டாகும்.
விசாகம் : பொறுமை வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்*

பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் திறமைக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி உறவு மேம்படும். முயற்சிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
அனுஷம் : உயர்வான நாள்.
கேட்டை : உறவு மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். குடும்ப நபர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பேசும்போது நிதானமாக பேசுவது நன்மை தரும். உடல் ஆரோக்கியம் பற்றிய சிந்தனைகள் மேம்படும். நினைத்த காரியம் சில தடைகளுக்கு பின் நினைத்தப்படி நிறைவேறும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

மூலம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.
பூராடம் : விருப்பங்கள் நிறைவேறும்.
உத்திராடம் : சிந்தனைகள் மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். விருந்துகளில் பங்கேற்று மனம் மகிழ்வீர்கள். நண்பர்களுடன் சேர்ந்து உல்லாச பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மனம் விரும்பிய சில நிகழ்வுகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : சுபிட்சமான நாள்.
திருவோணம் : கவலைகள் நீங்கும்.
அவிட்டம் : மகிழ்ச்சி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

வியாபாரம் தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். உறவினர்களுடன் வாக்குவாதங்களை தவிர்க்கவும். தொழில் அபிவிருத்திக்கான பண உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைச்சுமை குறையும். முயற்சிக்கேற்ற பலன்கள் கிடைக்கும். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

அவிட்டம் : வாதங்களை தவிர்க்கவும்.
சதயம் : உதவி கிடைக்கும்.
பூரட்டாதி : நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தினருக்காக சில பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வாழ்க்கையில் புதிய முன்னேற்றம் ஏற்படும். புதிய நபர்களின் மூலம் தொழிலில் இலாபம் அதிகரிக்கும். மனம் மகிழும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : ஒற்றுமை பிறக்கும்.
உத்திரட்டாதி : முன்னேற்றமான நாள்.
ரேவதி : இலாபம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•