*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_மார்கழி 28_*
*_12.01.2019_*
*_சனிக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
மூத்த சகோதரர்களிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். பணியில் உங்களுக்கு எதிராக செயல்படுவோரிடம் சுமூகமான நிலை உண்டாகும். செய்யும் பணியில் திருப்திகரமான சூழல் அமையும். குழந்தைகளால் மேன்மை உண்டாகும். கலை அறிவு மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
அசுவினி : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
பரணி : திருப்திகரமான நாள்.
கிருத்திகை : அறிவு மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் சிறிது காலதாமதம் நேரிடலாம். சக ஊழியர்களிடம் வீண் விவாதங்களை தவிர்த்து அமைதி காக்கவும். அக்கம் பக்கம் வீட்டார்களினால் சாதகமற்ற சூழல் அமையும். விளையாட்டு போட்டிகளில் ஈடுபடுபவர்களுக்கு உடல்நலத்தில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
கிருத்திகை : காலதாமதம் நேரிடலாம்.
ரோகிணி : அமைதி காக்கவும்.
மிருகசீரிடம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
தந்தையிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் குறையும். மகிழ்ச்சியான சூழல் அமையும். தாய் பற்றிய கவலைகள் தோன்றி மறையும். பணியில் இருந்து வந்த மந்தத்தன்மை நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். தொழிலில் உங்களின் புதிய கண்டுபிடிப்புகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
மிருகசீரிடம் : மனக்கசப்புகள் குறையும்.
திருவாதிரை : சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.
புனர்பூசம் : மகிழ்ச்சி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
தொழில் சம்பந்தமான பயணங்களில் உறவினர்களின் ஆதரவால் அனுகூலம் ஏற்படும். உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வீடு மற்றும் மனை வாங்குவதற்கான தன உதவிகள் கிடைக்கும். மனைவியால் அனுகூலமான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.
பூசம் : உதவிகள் கிடைக்கும்.
ஆயில்யம் : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
குடும்ப உறுப்பினர்களுக்கிடையே மனக்கசப்புகள் தோன்றலாம். புத்திரர்களிடம் அன்பாகப் பேசி அரவணைக்கவும். பெரியோர்களிடம் நிதானத்துடன் உரையாடவும். கொடுக்கல், வாங்கலில் சிறிது கவனம் வேண்டும். பணி சம்பந்தமான இடமாற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மகம் : கனிவு வேண்டும்.
பூரம் : நிதானம் வேண்டும்.
உத்திரம் : இடமாற்றம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி*
சர்வதேச வணிகத்தில் உங்களின் முயற்சியால் எதிர்பார்த்த இலாபம் அடைவீர்கள். பெரியவர்களின் ஆலோசனைகளை கேட்கவும். உங்களின் தொழில் திறமையால் புதியவர்களின் நட்பு கிடைக்கும். உறவுகளின் ஆதரவால் உயர்வான நிலை உண்டாகும். வாகனப் பயணங்களால் இலாபம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திரம் : இலாபம் அதிகரிக்கும்.
அஸ்தம் : உயர்வு உண்டாகும்.
சித்திரை : ஆதரவு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
போட்டித் தேர்வுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எடுத்துச்செல்லும் உடைமைகளின் மீது கவனம் வேண்டும். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : சாதகமான நாள்.
சுவாதி : கவனம் வேண்டும்.
விசாகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களுடன் விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகளை தீர்க்க முயல்வீர்கள். செய்யும் தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். உங்களின் நிர்வாகத் திறன் வெளிப்பட்டு அனைவராலும் பாராட்டப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : மகிழ்ச்சியான நாள்.
அனுஷம் : இன்னல்கள் குறையும்.
கேட்டை : பாராட்டப்படுவீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
உங்களின் பெருந்தன்மையான செயல்பாடுகளால் அனைவராலும் மதிக்கப்படுவீர்கள். தம்பதிகளுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து உறவு பலப்படும். திருமண வரன் தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் கிடைக்கும். தொழில் சார்ந்த பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மூலம் : மதிப்பு உயரும்.
பூராடம் : உறவு மேம்படும்.
உத்திராடம் : அனுகூலம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் நற்பெயர்கள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எண்ணிய செயலில் இருந்த இடர்பாடுகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். இறை வழிபாட்டில் மனம் ஈடுபடும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : நற்பெயர்கள் உண்டாகும்.
திருவோணம் : சுபிட்சமான நாள்.
அவிட்டம் : வாய்ப்புகள் அமையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
கலைஞர்களுக்கு சாதகமான நாள். அந்நியர்களிடம் பேசும்போது கவனம் வேண்டும். புதிய சூழலை அனுசரித்து நடந்து கொள்ளவும். பணியில் எதிர்பாராத தடை, தாமதங்கள் உண்டாகலாம். உங்களின் கல்வி அறிவால் மேன்மையான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
சதயம் : விவேகத்துடன் செயல்படவும்.
பூரட்டாதி : மேன்மையான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
அரசு தொடர்புடைய செயல்களில் அனுகூலம் உண்டாகும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் அமையும். செய்த செயல்களுக்கு மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். கூட்டாளிகளின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : அனுகூலம் உண்டாகும்
உத்திரட்டாதி : மதிப்பு அதிகரிக்கும்.
ரேவதி : இன்பமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
