⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
??⚜?முத்தமிழ் டிவி?⚜??
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

??ராசிபலன்கள்??

? 7/10/2018 ?

?மேஷம் ராசி

உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வர்த்தகம் சம்பந்தமான புதிய சிந்தனைகள் தோன்றும். எதிர்பாராத பரிசுகளால் மனமகிழ்ச்சி உண்டாகும். மனதில் தோன்றும் புதுவிதமான எண்ணங்களால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

அசுவினி : சாதகமான சூழல் அமையும்.
பரணி : புதிய சிந்தனைகள் தோன்றும்.
கிருத்திகை : பரிசுகள் கிடைக்கும்.

?ரிஷபம் ராசி

செய்யும் தொழிலில் உங்களின் செல்வாக்கு மற்றும் மதிப்பு உயரும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். விவாதங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பழைய நண்பர்களை சந்திப்பதால் மகிழ்ச்சி உண்டாகும். பயணங்களால் புதுவிதமான அனுபவம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

கிருத்திகை : நற்பெயர் கிடைக்கும்.
ரோகிணி : மதிப்பு உயரும்.
மிருகசீரிடம் : சாதகமான நாள்.

?மிதுனம் ராசி

பணி சம்பந்தமான விஷயங்களை எவரிடமும் பகிரவேண்டாம். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். உடைமைகளில் கவனம் வேண்டும். மனதில் தோன்றும் இனம் புரியாத எண்ணங்களால் சோர்வு உண்டாகும். உறவினர்களால் அலைச்சல்கள் உண்டாகும். பிள்ளைகளிடம் கனிவுடன் பழகவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மிருகசீரிடம் : அனுசரித்துச் செல்லவும்.
திருவாதிரை : சோர்வு உண்டாகும்.
புனர்பூசம் : அலைச்சல்கள் ஏற்படும்.

?கடகம் ராசி

வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். உறவினர்களிடமிருந்து தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும். பொதுச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். தாயின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். நண்பர்களின் மூலம் சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : அனுகூலம் உண்டாகும்.
பூசம் : தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும்.
ஆயில்யம் : புதிய வாய்ப்புகள் அமையும்.

?சிம்மம் ராசி

தொழில் சார்ந்த வாகனப் பயணங்களால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். தாய்வழி உறவினர்களின் ஆதரவினால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். மனை சம்பந்தமான விவகாரங்களில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய முயற்சிகள் எதிர்பார்த்த பலனை தரும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

மகம் : மகிழ்ச்சியான நாள்.
பூரம் : இலாபம் கிடைக்கும்.
உத்திரம் : முயற்சிகளால் ஆதாயம் கிடைக்கும்.

?கன்னி ராசி

எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். தொழிலில் புதுவிதமான முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். நண்பர்களின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். செய்யும் பணியில் பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திரம் : புத்திக்கூர்மை வெளிப்படும்.
அஸ்தம் : முன்னேற்றமான நாள்.
சித்திரை : மேன்மையான நாள்.

?துலாம் ராசி

ஆபரணச் சேர்க்கைக்கான வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்களிடம் பேசும்போது பேச்சில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்க காலதாமதமாகும். இளைய சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும். பொருளாதாரத்தில் சிக்கலான சூழல் உண்டாகும். நண்பர்களின் மூலம் சில விரயச் செலவுகள் நேரிடலாம். தம்பதிகளுக்கிடையே சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

சித்திரை : நிதானம் வேண்டும்.
சுவாதி : பேச்சில் கவனம் தேவை.
விசாகம் : தனவரவு கிடைக்க காலதாமதமாகும்.

?விருச்சகம் ராசி

கணவன், மனைவிக்கிடையே இருந்த சண்டை சச்சரவுகள் குறைந்து சுமூகமான நிலை உண்டாகும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். வழக்குகளில் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : உறவு மேம்படும்.
அனுஷம் : நட்பு வட்டம் பெருகும்.
கேட்டை : எண்ணங்கள் மேலோங்கும்.

?தனுசு ராசி

மூத்த சகோதரர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். திருமண வரன் கைக்கூடும். புதிய மனை வாங்குவதற்கான சூழல் அமையும். சக ஊழியர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

மூலம் : ஆசிகள் கிடைக்கும்
பூராடம் : திருமண வரன் கைக்கூடும்.
உத்திராடம் : புத்துணர்ச்சி உண்டாகும்.

?மகரம் ராசி

புத்திரர்களின் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்சனைகள் குறைந்து சுமூகமான நிலை உண்டாகும். வெளியூர் சம்பந்தமான பயணங்களால் சுபிட்சம் உண்டாகும். அரசு செயல்களில் இருந்து வந்த தடைகள் அகலும். எதிர்பாலின மக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவோணம் : சுபிட்சம் உண்டாகும்.
அவிட்டம் : தடைகள் அகலும்.

?கும்பம் ராசி

சுபச்செயல்கள் நடைபெறும். கூட்டுத்தொழிலில் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் உங்களின் செல்வாக்கு மேம்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நீர் பாசன வசதிகளால் மேன்மை உண்டாகும். பதவி உயர்விற்கான சூழல் அமையும். உங்களின் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அவிட்டம் : எண்ணங்கள் ஈடேறும்.
சதயம் : நன்மைகள் உண்டாகும்.
பூரட்டாதி : செல்வாக்கு மேம்படும்.

?மீனம் ராசி

வாகனங்களில் உள்ள பழுதுகளை சரிசெய்வீர்கள். வாழ்க்கைப் பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். மறைமுக எதிரிகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். மனதில் இருந்து வந்த ஐயம் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

பூரட்டாதி : மகிழ்ச்சிகரமான நாள்.
உத்திரட்டாதி : புரிதல் உண்டாகும்.
ரேவதி : சாதகமான நாள்.

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
??⚜?முத்தமிழ் டிவி?⚜??
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜