*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_தை 07_*

*_21.01.2019_*
*_திங்கட்கிழமை_*

*_வரலாற்றில் இன்று_*

•┈┈•❀??????❀•┈┈•

*நிகழ்வுகள்*

•┈┈•❀??????❀•┈┈•

1643 – ஏபல் டாஸ்மான் தொங்காவில் இறங்கிய முதல் ஐரோப்பியர் ஆனார்.

1720 – சுவீடனும் புருசியாவும் ஸ்டாக்ஹோம் அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்தி போரை நிறுத்திக் கொண்டன.

1774 – முதலாம் அப்துல் அமீது உதுமானியப் பேரரசராகவும் இசுலாமின் கலிபாவாகவும் நியமிக்கப்பட்டார்.

1793 – பிரான்சின் பதினாறாம் லூயி மன்னன் அரசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக கில்லட்டின் மூலம் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.

1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்க மேலவையில் இருந்து விலகினார்.

1924 – சோவியத் தலைவர் விளாதிமிர் லெனின் இறந்தார்.

1925 – அல்பேனியா குடியரசாக அறிவிக்கப்பட்டது.

1941 – இரண்டாம் உலகப் போர்: அவுஸ்திரேலிய மற்றும் பிரித்தானியப் படைகள் லிபியாவின் டோபுருக் நகரைத் தாக்கின.

1947 – முதலாவது சிங்களத் திரைப்படம் கடவுணு பொரன்டுவ இலங்கையில் திரையிடப்பட்டது.

1948 – கியூபெக்கின் தேசியக் கொடி ஏற்றுக் கொள்ளப்பட்டு முதற்தடவையாக அதன் தேசியப் பேரவையில் பறக்க விடப்பட்டது.

1954 – உலகின் முதலாவது அணுசக்தியாலான நீர்மூழ்கிக் கப்பல், நோட்டிலஸ், அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்பட்டது.

1960 – மேர்க்குரி விண்கலத்தில் சாம் என்ற பெண் செம்முகக் குரங்கு விண்வெளிக்குப் பயணமானது.

1960 – யமேக்காவில் மொண்டேகோ விரிகுடாவில் வீழ்ந்து தீப்பற்றியதில் 37 பேர் உயிரிழந்தனர்.

1961 – தென்னாப்பிரிக்காவில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 435 தொழிலாளர்கள் உயிருடன் புதையுண்டனர்.

1968 – பி-52 ஸ்ராடோபோட்ரெஸ் குண்டுவீச்சு விமானம் ஒன்று அமெரிக்காவின் தூலே வான் தளத்தில் மோதியதில், அப்பகுதி முழுவது அணுக் கதிர்வீச்சினால் பாதிப்படைந்தது.

1972 – திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியன இந்தியாவின் தனி மாநிலங்களாக்கப்பட்டன.

1976 – கான்கோர்டு விமானம் தனது முதலாவது வணிக சேவையை இலண்டன்-பகுரைன், பாரிசு-ரியோ வழியாக ஆரம்பித்தது.

2003 – 7.6 அளவு நிலநடுக்கம் மெக்சிக்கோவின் கொலிமா மாநிலத்தைத் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர்.

2004 – நாசாவினால் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட ஸ்பிரிட் தளவுளவியின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. எனினும் இது பூமியில் தன்னியக்க முறையில் திருத்தப்பட்டு பெப்ரவரி 6 இல் தொடர்புகள் மீண்டும் பெறப்பட்டன.

2008 – அலாஸ்காவின் இயாக் மொழி பேசும் கடைசி பழங்குடி இறந்தார்.

2009 – செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைக்கப்பட்டது.

•┈┈•❀??????❀•┈┈•

*பிறப்புகள்*

•┈┈•❀??????❀•┈┈•

1863 – பிரம்மானந்தர், தமிழக ஆன்மிகவாதி (இ. 1922)

1869 – கிரிகோரி ரஸ்புடின், உருசிய மதகுரு, மந்திரவாதி (இ. 1916)

1908 – பெங்கித் சுட்டிராங்மன், தென்மார்க்கு வானியலாளர் (இ. 1987)

1919 – அரிசரண் சிங் பிரார், இந்திய-பஞ்சாப் அரசியல்வாதி (இ. 2009)

1923 – உலோலா புலோறேஸ், எசுப்பானியப் பாடகி (இ. 1995)

1924 – மது தன்டவதே, இந்திய இடதுசாரி அரசியல்வாதி (இ. 2005)

1928 – யீன் சார்ப், அமெரிக்க அரசியல் அறிவியலாளர்

1941 – எலைன் ஷோவால்டர், அமெரிக்க எழுத்தாளர்

1953 – பவுல் ஆல்லென், மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர்

1957 – கி. சிவநேசன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 2008)

1958 – உ. வாசுகி, தமிழக-இந்திய இடதுசாரி அரசியல்வாதி

1968 – சஞ்சய் சுப்ரமண்யன், தமிழகக் கருநாடக இசைப் பாடகர்

1980 – சந்தானம், தமிழக நகைச்சுவை நடிகர்

•┈┈•❀??????❀•┈┈•

*இறப்புகள்*

•┈┈•❀??????❀•┈┈•

1793 – பிரான்சின் பதினாறாம் லூயி (பி. 1754)

1892 – ஜான் கவுச் ஆடம்சு, பிரித்தானியக் கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1819)

1924 – விளாதிமிர் லெனின், உருசிய மார்க்சியப் புரட்சியாளர், சோவியத் ஒன்றியத்தின் 1வது தலைவர் (பி. 1870)

1926 – கேமிலோ கொல்கி, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய மருத்துவர் (பி. 1843)

1945 – ராஷ் பிஹாரி போஸ், இந்திய விடுதலைப் போராட்ட வீரர், பொறியியலாளர் (பி. 1886)

1950 – ஜார்ஜ் ஆர்வெல், பிரித்தானிய எழுத்தாளர் (பி. 1903)

1981 – விஷ்ணுராம் மேதி, அசாம் முதலமைச்சர் (பி. 1888)

1989 – பில்லி டிப்டன், அமெரிக்க இசைக் கலைஞர் (பி. 1914)

1989 – சு. வித்தியானந்தன், ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர்

1992 – எடி மாபோ, ஆத்திரேலியப் பழங்குடித் தலைவர் (பி. 1936)

2002 – சொக்கலிங்க பாகவதர், தமிழ் திரைப்பட நடிகர்

2013 – எம். எஸ். உதயமூர்த்தி, தமிழக எழுத்தாளர், தொழிலதிபர்

2016 – மிருணாளினி சாராபாய், இந்திய நடனக் கலைஞர் (பி. 1918)

•┈┈•❀??????❀•┈┈•

*சிறப்பு நாள்*

•┈┈•❀??????❀•┈┈•

கொடிநாள் (கியூபெக்)

•┈┈•❀??????❀•┈┈•