~~~முத்தமிழ் டிவி~~~
1918 – லித்துவேனியா ரஷ்யாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
* 1934 – ஆஸ்திரியாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
* 1937 – வொலஸ் கரோத்தேர்ஸ் நைலானுக்கான காப்புரிமம் பெற்றார்.
* 1945 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் படைகள் பிலிப்பைன்சின் கொரெகிடோர் தீவில் தரையிறங்கினர்.
* 1945 – இரண்டாம் உலகப் போர்: முதல் தடவையாக அமெரிக்கப் போர் விமானம் டோக்கியோவைத் தாக்கியது.
* 1945 – அமெரிக்கப் படைகள் பிலிப்பைன்சின் பட்டான் குடாவை மீளக் கைப்பற்றினர்.
* 1947 – 80 ஆண்டுகளாக பிரித்தானியர்களாக இருந்த கனேடியர்கள் முதற்தடவையாக கனேடிய குடியுரிமையைப் பெற்றனர். பிரதமர் வில்லியம் லியோன் மக்கென்சி முதலாவது குடியுரிமையைப் பெற்றார்.
* 1959 – ஜனவரி 1-ல் புல்ஜென்சியோ பட்டீஸ்டாவை அதிபர் பதவியில் இருந்து அகற்றிய பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் புதிய தலைவரானார்.
* 1961 – எக்ஸ்புளோரர் 9 (S-56a) விண்ணுக்கு ஏவப்பட்டது.
* 1983 – ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களில் இடம்பெற்ற காட்டுத்தீயில் சிக்கி 71 பேர் கொல்லப்பட்டனர்.
* 1985 – ஹிஸ்புல்லா தீவிரவாத இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
* 1986 – சோவியத் கப்பல் மிகைல் லெர்மொண்டொவ் நியூசிலாந்தில் மூழ்கியது.
* 1988 – சிங்களத் திரைப்பட நடிகர், அரசியல்வாதி விஜய குமாரதுங்க கொழும்பில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
* 2005 – கியோட்டோ உடன்பாடு நடைமுறைக்கு வந்தது.
* 2007: 2000-ம் ஆண்டில் தர்மபுரி பேருந்து தீவைப்பு நிகழ்வில் மூன்று மாணவிகளை உயிருடன் எரித்துக் கொலை செய்த அ.தி.மு.க.வினர் மூவருக்கு தூக்குத்தண்டனயும் மேலும் 25 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 பேருக்கு தூக்குத்தண்டனை அறிவிக்கப்பட்ட நாள் (பிப்.16- 2007)
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2000-ம் ஆண்டு வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் சென்ற பஸ்சை அ.தி.மு.க. தரப்பினர் தீ வைத்து எரித்தனர். இதில் 3 மாணவிகள் பலியானார்கள். இந்த வழக்கில் 2007-ம் ஆண்டு நீதிமன்றம் 3 பேருக்கு தூக்குத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது
தாதா சாகேப் பால்கே இறந்த தினம் (பிப்.16- 1944)
தாதா சாகேப் பால்கே என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக கருதப்படுகிறார்.
இவர் நாசிக்கில் 1870-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிறந்தார். 1885-ம் ஆண்டு மும்பையில் உள்ள சர் ஜெ.ஜெ கலைக்கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1910 முதல் 1940 வரை பல திரைப்படங்களை உருவாக்கினார். பெரும்பாலும் அத்திரைப்படங்களை அவரே இயக்கவும் செய்தார்.
இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் தாதா சாகேப் பால்கே. இந்தியாவிற்கு சினிமாவை முதலில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான். தொடக்கத்தில் வெளிவந்த படங்கள் எதுவும் வண்ணப்படங்கள் அல்ல. ஒலியும் இல்லாமல் ஊமைப்படங்களாகத்தான் இருந்தன.
பால்கே தனது தீவிர முயற்சியினால் ஒரு சினிமாவை எழுதி இயக்கினார். படத்தின் பெயர் அரிச்சந்திரா. நடிகர்களை எப்படித் தேர்வு செய்வது என்று அவர் யோசிக்கவே இல்லை. தனது குடும்பத்திலிருந்த மொத்தம் 18 பேர்களையும் நடிகர்களாக ஆக்கி நடிக்க வைத்து விட்டார் பால்கே. எனவே முதல் இந்திய சினிமா ஒரு குடும்பப் படமே ஆகும்.
இவர் தனது 73-வது வயதில் 1944-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி இயற்கை எய்தினார்.
அவருடைய நினைவாக தாதா சாகெப் பால்கே விருது நிறுவப்பட்டது.
