சேலம் மாநகர மக்களின் நீண்ட கால கனவு நிறைவேறியதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலத்தில் ரூ.441 கோடியில் கட்டப்படுள்ள ஈரடக்கு மேம்பாலம் மற்றும் ரூ.46.35 கோடியில் லீ-பஜார் ரயில்வே பாலம் ஆகியவற்றை திறந்து வைத்த பின் செய்தியாளர்குக்கு பேட்டியளித்த அவர், சேலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் திட்டத்துடன் ஈரடுக்கு மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் போக்குவரத்து நெரிசலை மேலும் குறைக்க பல்வேறு பாலப்பணிகள் நடைபெற்று வருகின்றன என்று கூறியுள்ளார்.

