பிஎஸ்என்எல் ரூ.2399 என்கிற பிளானை 600 நாட்கள் என்கிற செல்லுபடியின் கீழ் அறிமுகம் செய்துள்ளது. ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகியவற்றிலிருந்து கிசைக்கும் மற்றநீண்ட கால திட்டங்கள் இதோ!

            இது ரீசார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து 600 நாட்கள் என்கிற அபாரமான செல்லுபடியாகும் காலத்தை கொண்டுள்ளது. சந்தையில் உள்ள மற்ற திட்டங்கள் எதுவும் இந்த வகையான செல்லுபடியாகும் காலத்தை வழங்கவில்லை என்பது வெளிப்படை.

ஆனால் திட்டத்தின் ஒரே குறை என்னவென்றால், இது எந்த விதமான டேட்டாநன்மையையும் வழங்காது. நீங்கள் வரம்பற்ற அழைப்பு, 100 எஸ்எம்எஸ் / நாள் மற்றும் பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் (60 நாட்கள்) போன்ற நன்மைகளையே பெறுவீர்கள்.

ஒருவேளை நீங்கள் டேட்டாவை அதிகம் பயன்படுத்தாத மற்றும் நீண்ட காலத்திற்கு குரல் அழைப்பு வசதியை மட்டுமே விரும்புபவர் என்றால், இது உங்களுக்கான திட்டம் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். இந்த பிஎஸ்என்எல் ரூ.2,399 திட்டம் அனைத்து வட்டங்களிலும் செல்லுபடியாகும் மற்றும் இதன் முழு செல்லுபடியாகும் காலத்திற்கும் ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் என்கிற எஃப்யூபி உள்ளது என்பதையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

பாரதி ஏர்டெல் ரூ.2,398 நீண்ட கால திட்டம்:

– 1.5 ஜிபி அளவிலான தினசரி டேட்டா
– 100 எஸ்எம்எஸ் / நாள்
– வரம்பற்ற குரல்
– 365 நாட்களுக்கு செல்லுபடியாகும்
– ZEE5 பிரீமியத்திற்கான இலவச சந்தா
– ஸ்மார்ட்போனிற்கான வைரஸ் எதிர்ப்பு
– 28 நாட்களுக்கு ஷா அகாடமியில் இலவச வகுப்புகள்
– இலவச ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிரீமியம்
– இலவச விங்க் மியூசிக்
– இலவச ஹெலோட்டூன்ஸ்
– ஃபாஸ்டேக்கில் ரூ.150 கேஷ்பேக்.

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.2,399 நீண்ட கால திட்டம்:

– 365 நாட்கள் என்கிற செல்லுபடி
– அழைப்புகளுக்கான ஐ.யூ.சி வரம்பு
– தினமும் 2 ஜிபி டேட்டா
– ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்
– அனைத்து ஜியோ ஆப்ஸ்களுக்கும் இலவச சந்தா.

வோடபோன் ரூ.2,399 நீண்ட கால திட்டம்:

– 1.5 ஜிபி அளவிலான தினசரி டேட்டா
– வரம்பற்ற அழைப்பு
– இலவச 100 எஸ்எம்எஸ் / நாள்

– வோடபோன் ப்ளே இலவச சந்தா
– ZEE5 பிரீமியத்திற்கான இலவச சந்தா
– 365 நாட்கள் செல்லுபடியாகும்.