

சேலம் : மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஐயா டாக்டர்.APJ.அப்துல் கலாம் அவர்களின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தில் நுகர்வோர் உரிமைகள் இயக்கம் மற்றும் பாரதி உரிமைகள் அறக்கட்டளை சார்பில் இரண்டாம் ஆண்டாக அரசு பள்ளிகளில் படித்த ஏழை மாணவிகள் 25 பேருக்கு தலா ரூபாய் ஆயிரம் வீதம் ரூபாய் 25,000 கல்வி ஊக்கத் தொகை,ஒரு பேனா, ஒரு FILE ஆகியவை நுகர்வோர் உரிமைகள் இயக்க நிறுவனர் J.M பூபதி மற்றும் பாரதி உரிமைகள் அறக்கட்டளை நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.இதனையொட்டி சேலம் கோட்டை மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று அப்துல்கலாம் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர் .மேலும் இந்நிகழ்ச்சியில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு கல்விக்கரம் கொடுக்க உதவிய நல் நெஞ்சங்கள் அனைவருக்கும் நன்றிகள் தெரிவித்துக்கொண்டனர் .
