CCTV கேமரா உதவியால் குற்றம் நிகழ்ந்த 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்து சுமார் 4.5 லட்சம் பொருட்களை மீட்ட அஸ்தம்பட்டி போலீசாருக்கு பாராட்டு

சேலம் மாநகரம் அஸ்தம்பட்டி காவல் சரகம் மரவனேரி பகுதியில் இயங்கும் லிட்டில் ஜீனியர்ஸ் ப்ளே ஸ்கூல் மற்றும் ஃப்ரீ ஸ்கூல் நடந்து வருகிறது. திரு.M. அருள் முருகன் என்பவர் 11/04/19 ந்தேதி தங்களது பள்ளியில் ரூபாய் 4.5 லட்சம் மதிப்புள்ள பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக கொடுத்த புகாரின் பேரில் அஸ்தம்பட்டி காவல் ஆய்வாளர் திரு.பொன்ராஜ் அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். வடக்கு சரக குற்றப்பிரிவு உதவி ஆணையர் திரு T.தினகரன் அவர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர் மற்றும் SSI திரு.துரை, HC 529 திரு.ரத்தினவேல், மற்றும் HC 1722 திரு.சசிகுமார் ஆகியோர்கள் அடங்கிய குழுவினர் 12.04.19 ஆம் தேதி சிசிடிவி கேமரா உதவியுடன் மேற்படி குற்றவழக்கில் ஈடுபட்ட சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த (1)k.ரகுபதி(26) மற்றும் (2) மாதேஷ்(41) என்ற குற்றவாளிகளை கைது செய்தது.
சுமார் ரூ. 4.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மீட்டு மேற்கண்ட குற்றவாளிகளை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்த காவல் துறையினரை மாநகர காவல் ஆணையாளர் பாராட்டினார்.
