திரு.N. பாலசுப்பிரமணியன் அவர்கள் 1996 ஆம் ஆண்டு நேரடி காவல் உதவி ஆய்வாளர் பணியில் சேர்ந்து சட்டம் மற்றும் ஒழுங்கு பணியில் சிறப்பாக பணிபுரிந்து, பின்பு CBCID இல் பல வழக்குகளை சிறப்பாக புலன் விசாரணை செய்து அதற்காக சிறந்த புலன் விசாரணைக்கான விருதையும் பெற்றுள்ளார். தற்போது சேலம் மாநகர நுண்ணறிவு பிரிவில் உதவி காவல் ஆணையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் மெச்சத்தகுந்த பணிபுரிந்தமைக்கான 31/01/2019 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் பதக்கம், மாண்புமிகு தமிழக முதலமைச்சரால், சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் வழங்கப்பட்டது.