மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்தது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1000 கன அடியை தாண்டியது.

இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை முற்றிலும் குறைந்தது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து மேலும் குறைந்துள்ளது.

நேற்று 708 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 134 கன அடியானது. 43.21 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 42.83 அடியானது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக 2500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைந்துள்ளதால் அணையின் நீர்மட்டம் தினமும் அரை அடிக்கும் மேல் சரிந்து வருகிறது.

டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கு போதுமான தண்ணீர் சென்றடையாத நிலையில் இனி வரும் காலங்களில் மழை பெய்தால் மட்டுமே கூடுதல் தண்ணீர் வர வாய்ப்புள்ளதால் மழை வருமா? என்ற ஏக்கத்தில் விவசாயிகள் உள்ளனர்.

நன்றி : மாலைமலா்