07.06.2020 சேலம் மாநகர் மாவட்டத்தில் மிக மிக சிறப்பாக இலவச மருத்துவ முகாம் மக்கள் சட்ட உரிமைகள் கழகம் மற்றும் விஸ்வ இந்து பரிசத் சார்பாக சேலம் மாநகரம் கருங்கல்பட்டி 56வது கோட்டத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட துணைச் செயலாளர் அங்குராஜ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். ரோட்டரி வி. விஜய் ஆனந்த் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் அவர்களும், அரிமா ஆர் வி பாபு மாநில இளைஞரணி செயலாளர் அவர்களும் முன்னிலை வகித்தனர். இவ்விழாவிற்கு கே. தேவராஜ் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் தலைமை தாங்கினார். செவ்வாபேட்டை காவல் ஆய்வாளர் சுந்தராம்பாள் அவர்கள் கௌரவ அழைப்பாளராக கலந்து கொண்டார். மாநில ஆட்சிமன்ற குழு உறுப்பினர் ஒ டெக்ஸ் MA இளங்கோவன் அவர்களும், முன்னால் மண்டல குழு தலைவர் சண்முகம் அவர்களும், குற்றம் குற்றமே வார இதழ் உதவி ஆசிரியர் வழக்கறிஞர் Dr Press ராம் அவர்களும், 56வது கோட்ட செயலாளர் சேகர் அவர்களும், ஜினோத் அவர்களும், கண்ணதாசன் அவர்களும் மற்றும் அமைப்பின் அங்கங்களான மாவட்ட ஆன்மீக அணி அமைப்பாளர் சொற்பொழிவாளர் சேலம் சிட்டிபாபு அவர்களும், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கோவி முருகன், பனமரத்துப்பட்டி ஒன்றிய செயலாளர் சிவசக்தி, அதிகாரிபட்டி பிரகாஷ், கிச்சிப்பாளையம் அஷ்ரஃப் , ஹோட்டல் சக்தி, ரஜினி மக்கள் மன்றம் ஐயப்பன், காந்தி காமராஜர் நற்பணிமன்றம் மான் பாண்டியன், விஹெச்பி மாவட்ட நிர்வாகிகள் கே எஸ் செந்தில்குமார், டி பெரியசாமி, குப்புசாமி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்கள். 56, 57, 58 ,கோட்டத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் 5000 குடும்பங்களுக்கு மட்டும் ஹோமியோபதி எதிர்ப்புசக்தி மாத்திரை வழங்கி விழா இனிதே நடைைபெற்றது. பொது மக்களிடம் வரவேற்பு மிக மிக சிறப்பாக இருந்தது. இது போல் ஒரு நிகழ்வு இப்பகுதியில் இதுநாள்வரை நடந்தது இல்லை என அப்பகுதி பொதுமக்கள் பெருமையுடன் கூறி சென்றார்கள்.

