19.05.2020 இன்று சேலம் மாநகர காவல் துறையில் தூய்மைப் பணியாளர்களாக பணிபுரிந்து வருபவர்களுக்கு, தமிழியக்கம் மாவட்டத் தலைவர் MA. இளங்கோவன், மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சேலம் மாவட்ட செயலாளர் R.V.பாபு, மாநில நிர்வாக குழு அமைப்பாளர் K. தேவராஜ், V.விஜய் ஆனந்த் , கோகுல், ஹரிஸ் ஆகியோர் அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை சேலம் மாநகர காவல் ஆணையாளர் T.செந்தில்குமார் I.P.S., அவர்களின் முன்னிலையில் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கினார்கள். காவல் துணை ஆணையாளர் சட்டம் மற்றும் ஒழுங்கு P.தங்கதுரை, காவல் துணை ஆணையாளர் குற்றம் மற்றும் போக்குவரத்து S.செந்தில், காவல் உதவி ஆணையாளர் நுண்ணறிவு பிரிவு N.பாலசுப்பிரமணியன் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.




