- 250 கிராம் பாஸ்மதி அரிசி
- 2 தக்காளி
- புதினா தேவையான அளவு
- 3 வெங்காயம்
- 2 பட்டை, லவங்கம், ஏலக்காய்,
- 1 ½ ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- நெய் தேவையான அளவு
- பச்சை மிளகாய் தேவையான அளவு
- 3 ஸ்பூன் மிளகாய் தூள்
- உப்பு தேவையான அளவு
- 250 கிராம் எண்ணெய்
- கொத்தமல்லி தேவையான அளவு
- 1 கப் தயிர்
- 400 கிராம் சிக்கன்
சிக்கன் பிரியாணி செய்முறை:
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் பட்டை லவங்கம் ஏலக்காய், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வதக்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும், பிறகு தக்காளி மிளகாய்த்தூள், உப்பு தேவையான அளவு சேர்த்து வதக்கவும்.
இப்போது வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்றாக கலக்கவும், பிறகு புதினா கொத்தமல்லி தயிர் சேர்த்து வதக்கவும்.
அடுத்து தண்ணீர் சேர்க்க வேண்டும், ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
பிறகு சுத்தம் செய்த பாஸ்மதி அரிசியை சேர்த்து மெதுவாக கிளறவும்.
பிறகு குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும், குக்கரை இறக்கியதும் திறக்க வேண்டாம் 2 நிமிடம் கழித்து லேசாக கிளறி பரிமாறவும்.
இப்போது சுவையான குக்கரில் செய்த சிக்கன் பிரியாணி தயார்…
