*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_மார்கழி 03_*

*_19.12.2019_*
*_வியாழக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வழக்குகளில் எதிர்பார்த்த தீர்ப்புகள் கிடைக்கும். சக ஊழியர்களின் செயல்பாடுகளில் தலையிட வேண்டாம். செயல்பாடுகளில் புத்திக்கூர்மை மற்றும் கற்பனை திறன் மேம்படும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அஸ்வினி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

பரணி : புத்திக்கூர்மை மேம்படும்.

கிருத்திகை : ஆர்வம் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

வாரிசுகளுடன் வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். உறவினர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பார்த்த சில செயல்பாடுகள் தடைகளுக்கு பின் ஈடேறும். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்

கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.

ரோகிணி : கவனம் வேண்டும்.

மிருகசீரிஷம் : ஆர்வம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

கணவன், மனைவிக்கிடையேயான உறவு மேம்படும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய வேலைவாய்ப்பு தொடர்பான முயற்சிகளில் சுபச்செய்திகள் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். மறைமுக போட்டிகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

மிருகசீரிஷம் : உறவு மேம்படும்.

திருவாதிரை : சாதகமான நாள்.

புனர்பூசம் : போட்டிகள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகள் சாதகமான பலன்களை அளிக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையில் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. வேலையில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

புனர்பூசம் : அனுகூலம் உண்டாகும்.

பூசம் : விவாதத்தை தவிர்க்கவும்.

ஆயில்யம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

விருந்து, விசேஷங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி அமைதி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் இலாபம் உண்டாகும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மகம் : மகிழ்ச்சியான நாள்.

பூரம் : இலாபம் உண்டாகும்.

உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

தாய்வழி உறவினர்களால் நன்மை உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உறவினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். புதிய வாகனம் வாங்குவது பற்றிய எண்ணங்கள் உண்டாகும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : நன்மை உண்டாகும்.

அஸ்தம் : அனுசரித்து செல்லவும்.

சித்திரை : சிந்தனைகள் மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

எதிர்பாராத தனவரவுகளால் சேமிப்பு உயரும். தொழிலில் புதுவிதமான திட்டங்களை தீட்டுவீர்கள். இளைய உடன்பிறப்புகளால் ஆதாயம் ஏற்படும். மன தைரியத்துடன் செயல்பட்டு காரியங்களை முடிப்பீர்கள். பதவி உயர்வால் மகிழ்ச்சி உண்டாகும். மூத்த உடன்பிறப்புகளிடம் நிதானமாக நடந்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

சித்திரை : சேமிப்பு உயரும்.

சுவாதி : ஆதாயம் ஏற்படும்.

விசாகம் : நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

தொழில் துறையில் இலாபம் உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்குவது பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் நிலவும். சுபகாரியங்கள் தொடர்பான சுபச்செய்திகள் கிடைக்கும். குடும்பத்தாரின் விருப்பங்களை அறிந்து, அதை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை :மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : இலாபம் உண்டாகும்.

அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.

கேட்டை : சுபச்செய்திகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் பதவி உயர்விற்கான வாய்ப்புகள் கிடைக்கும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய தொழில் தொடர்பான முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

மூலம் : சாதகமான நாள்.

பூராடம் : சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.

உத்திராடம் : ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

பணியில் ஏற்ற பொறுப்புகளை தாங்களே செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். பொறுமையுடன் செயல்பட்டு எடுத்த காரியங்களை முடிப்பீர்கள். தந்தையிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

உத்திராடம் : செயல்வேகம் அதிகரிக்கும்.

திருவோணம் : பொறுமை வேண்டும்.

அவிட்டம் : மகிழ்ச்சி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நன்மையை அளிக்கும். நெருக்கமானவர்களிடம் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும். பலதரப்பட்ட சிந்தனைகளால் மனக்குழப்பங்கள் தோன்றி மறையும். சபைகளில் எதிர்பார்த்த ஆதரவுகள் காலதாமதமாக கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அவிட்டம் : சிந்தித்து செயல்படவும்.

சதயம் : வாதங்களை தவிர்க்கவும்.

பூரட்டாதி : மனக்குழப்பங்கள் தோன்றும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

வாழ்க்கைத்துணை உறவுகளின் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். கூட்டாளிகளால் விரய செலவுகள் உண்டாகும். தொழில் சம்பந்தமான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட பணிகள் சிறப்பாக முடியும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.

உத்திரட்டாதி : விரய செலவுகள் உண்டாகும்.

ரேவதி : அறிமுகம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•