*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_மார்கழி 02_*

*_18.12.2019_*
*_புதன்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மரியாதை உயரும். பிள்ளைகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். எதிர்பார்த்த தனலாபம் உண்டாகும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

அஸ்வினி : கலகலப்பான நாள்.

பரணி : ஒற்றுமை அதிகரிக்கும்.

கிருத்திகை : தனலாபம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

உறவினர்களிடம் உறவுநிலை மேம்படும். பொதுநலத்திற்கான செயல்பாடுகளில் மனம் ஈடுபடும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

கிருத்திகை : உறவுநிலை மேம்படும்.

ரோகிணி : செல்வாக்கு உயரும்.

மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

தன்னம்பிக்கையுடன் அனைத்து காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். பயணங்களால் இலாபம் உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். மறைந்து இருந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வாரிசுகளின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் உங்களது அந்தஸ்து உயரும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்

மிருகசீரிஷம் : ஆசிகள் கிடைக்கும்.

திருவாதிரை : திறமைகள் வெளிப்படும்.

புனர்பூசம் : மரியாதை உயரும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

கணவன், மனைவிக்கிடையே உள்ள வாக்குவாதம் குறைந்து அன்பு அதிகரிக்கும். கூட்டாளிகளிடம் சாதகமான சூழல் அமையும். பொருளாதார மேன்மைக்கான செயல்பாடுகள் எண்ணிய பலன்களை தரும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

புனர்பூசம் : அன்பு அதிகரிக்கும்.

பூசம் : சாதகமான நாள்.

ஆயில்யம் : புதிய நட்பு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணியில் உள்ளவர்களுக்கு வீண் கவலைகள் தோன்றும். செயல்பாடுகளில் சிறிது கவனம் வேண்டும். போட்டி, பந்தயங்களில் சாதகமான சூழல் அமையும். கையாளும் பொருட்களில் கவனத்துடன் செயல்படவும். அக்கம்- பக்கம் வீட்டார்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மகம் : நிதானம் வேண்டும்.

பூரம் : கவலைகள் தோன்றும்.

உத்திரம் : விவாதங்களை தவிர்க்கவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

புத்திரர்களின் மூலம் சுபவிரயம் உண்டாகும். வெளிநாட்டு வேலைக்கான முயற்சிகள் ஈடேறும். பூர்வீக சொத்துக்களால் நன்மை உண்டாகும். வேள்விகளில் கலந்து கொண்டு மந்திர உபதேசம் பெறுவீர்கள். உயர் கல்விக்கான முயற்சிகள் நல்ல பலன்களை தரும். கொடுக்கல்-வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

உத்திரம் : சுபவிரயம் உண்டாகும்.

அஸ்தம் : முயற்சிகள் ஈடேறும்.

சித்திரை : முன்னேற்றம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

கடல் மார்க்க பயணங்களால் நன்மை உண்டாகும். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். தாயின் ஆதரவினால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பொருட்சேர்க்கை உண்டாகும். கலைஞர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

சித்திரை : ஆதரவான நாள்.

சுவாதி : இலாபம் கிடைக்கும்.

விசாகம் : திறமைகள் வெளிப்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

இளைய சகோதரர்கள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். பணியில் சாதகமான நிலை உண்டாகும். தாயின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள். எண்ணிய முயற்சிகள் ஈடேறும். நண்பர்களின் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

விசாகம் : அனுகூலமான நாள்.

அனுஷம் : கவனம் வேண்டும்.

கேட்டை : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். தந்தை மற்றும் வாரிசுகளுக்கு இடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வாக்குவன்மையால் பெருமை அடைவீர்கள். கடன் பிரச்சனைகள் குறைவதற்கான சூழல் உண்டாகும். நெருக்கமானவர்களுக்கிடையே விட்டுக்கொடுத்து செல்லவும். நிர்வாகத்தில் சாதகமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : எண்ணங்கள் மேலோங்கும்.

பூராடம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

உத்திராடம் : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். வீண் அலைச்சல்கள் உண்டாகும். வாகனப் பயணங்களில் கவனத்துடன் செல்லவும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். பெரியோர்களிடம் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திராடம் : கவனம் வேண்டும்.

திருவோணம் : மாற்றம் உண்டாகும்.

அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

நண்பர்களின் மூலம் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். சர்வதேச வணிகம் எதிர்பார்த்த பலன்களை தரும். அரசு அதிகாரிகளின் மூலம் சாதகமான நிலை ஏற்படும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். வெளிநாட்டு பயணங்களால் கீர்த்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : அபிவிருத்தி உண்டாகும்.

சதயம் : மகிழ்ச்சியான நாள்.

பூரட்டாதி : கீர்த்தி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் வந்தடையும். உடல்நலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி நலம் உண்டாகும். மூத்த சகோதரர்களிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

பூரட்டாதி : சுபச்செய்திகள் வந்தடையும்.

உத்திரட்டாதி : பிரச்சனைகள் நீங்கும்.

ரேவதி : உதவிகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•