*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_கார்த்திகை 24_*

*_10.12.2019_*
*_செவ்வாய்க்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

விடாப்பிடியாக இருந்து சில செயல்களை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் மற்றும் ஆசிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அஸ்வினி : எண்ணங்கள் நிறைவேறும்.

பரணி : இலாபம் அதிகரிக்கும்.

கிருத்திகை : ஆசிகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

தாய்வழி உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பெரியோர்களின் ஆலோசனைகளால் மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். உடன் பணிபுரியும் சக ஊழியர்களால் அனுகூலமான செயல்கள் நடைபெறும். செய்யும் செயல்களால் கீர்த்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : மகிழ்ச்சி உண்டாகும்.

ரோகிணி : அன்பு அதிகரிக்கும்.

மிருகசீரிஷம் : கீர்த்தி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

திட்டமிட்ட பணிகளை பல தடைகளை கடந்து தைரியத்துடன் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகளால் மேன்மையான சூழல் உண்டாகும். தொழில் நிமிர்த்தமான பயணங்களை மேற்கொள்வீர்கள். மனதில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். உயர் அதிகாரிகளிடம் நிதானமாக உரையாடவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிஷம் : தைரியம் அதிகரிக்கும்.

திருவாதிரை : மேன்மையான நாள்.

புனர்பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

தடைபட்டு வந்த காரியங்கள் இனிதே நடைபெறும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பொருட்சேர்க்கை உண்டாகும். விவாதங்களால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டாகும். எண்ணிய காரியங்கள் கைகூடும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : ஆரோக்கியம் மேம்படும்.

பூசம் : இலாபம் கிடைக்கும்.

ஆயில்யம் : காரியங்கள் கைகூடும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

கூட்டுத்தொழிலில் எதிர்பார்த்த வியாபாரம் நடைபெறும். அரசு சம்பந்தமான செயல்பாடுகளில் இருந்துவந்த காலதாமதம் நீங்கும். பொன், பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபநிகழ்ச்சிக்கான சுபச்செய்திகள் தேடி வரும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : எதிர்பார்த்த வியாபாரம் நடைபெறும்.

பூரம் : காலதாமதம் நீங்கும்.

உத்திரம் : அனுகூலமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

உயர் அதிகாரிகளின் ஆதரவால் சில பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். புதிய தொழில் முனைவதற்கான எண்ணங்கள் மேலோங்கும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் கல்வியில் கவனத்துடன் இருக்கவும். விளையாட்டு வீரர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திரம் : காரியசித்தி உண்டாகும்.

அஸ்தம் : எண்ணங்கள் மேலோங்கும்.

சித்திரை : கவனத்துடன் இருக்கவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

உடல் சோர்வினால் செய்யும் பணிகளில் மந்தத்தன்மை உண்டாகும். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் சுபமான முடிவுகள் கிடைக்கும். மனதில் ஒருவிதமான சஞ்சல எண்ணங்கள் தோன்றும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். புதிய தொழில் முதலீடுகளில் சற்று சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : மந்தத்தன்மை உண்டாகும்.

சுவாதி : குழப்பமான நாள்.

விசாகம் : சிந்தித்து செயல்படவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

வீண் செலவுகளை குறைக்க முயல்வீர்கள். குடும்ப உறுப்பினர்களால் நன்மை உண்டாகும். கூட்டாளிகளின் உதவியால் தொழிலில் இலாபம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

விசாகம் : செலவுகள் குறையும்.

அனுஷம் : இலாபம் ஏற்படும்.

கேட்டை : சிந்தனைகள் மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

கெளரவ பதவிகள் வந்தடையும். எதிர்பார்த்த தனவரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். வாழ்க்கை பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். படபடப்பை தவிர்த்து நிதானத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : உயர் பதவிகள் கிடைக்கும்.

பூராடம் : சேமிப்பு அதிகரிக்கும்.

உத்திராடம் : புரிதல் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

உறவுகளிடத்தில் மனம் விட்டு பேசுவது நல்லது. எதிர்பாலின மக்களால் சில இன்னல்கள் அவ்வப்போது தோன்றி மறையும். தொழிலில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். குடும்ப விவகாரங்களில் பிறரின் தலையீட்டை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திராடம் : இன்னல்கள் தோன்றும்.

திருவோணம் : எதிர்ப்புகள் குறையும்.

அவிட்டம் : தலையீட்டை தவிர்க்கவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

இறைவழிபாடு சம்பந்தமான செயல்பாடுகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். வாகனப் பயணங்களால் எதிர்பார்த்த பலன்கள் சாதகமாக அமையும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகத்தால் இலாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : ஆரோக்கியம் மேம்படும்.

சதயம் : மேன்மையான நாள்.

பூரட்டாதி : செல்வாக்கு உயரும்

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

பொதுப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும். தன்னம்பிக்கையுடன் புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். உடன்பிறப்புகளால் சாதகமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

பூரட்டாதி : வாய்ப்புகள் உண்டாகும்.

உத்திரட்டாதி : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

ரேவதி : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•