*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_கார்த்திகை 20_*

*_06.12.2019_*
*_வெள்ளிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த தனவரவால் சேமிப்பு அதிகரிக்கும். சொத்துச்சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். நிர்வாக திறமைகள் வெளிப்படும். தம்பதிகளுக்கிடையே அன்பு அதிகரிக்கும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளின் மூலம் மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

அஸ்வினி : அனுகூலமான நாள்.

பரணி : இலாபம் அதிகரிக்கும்.

கிருத்திகை : மேன்மை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

பொதுச்செயல்களில் ஈடுபட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பாராத தனவரவால் சேமிப்பு உயரும். உறவினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். பெரியோர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும். உயர் அதிகாரிகளிடம் செல்வாக்கு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

கிருத்திகை : மகிழ்ச்சி அடைவீர்கள்.

ரோகிணி : சேமிப்பு உயரும்.

மிருகசீரிஷம் : செல்வாக்கு அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

பணியில் சக ஊழியர்களால் மனநிம்மதி ஏற்படும். கெளரவ பதவிகளால் உங்களின் மதிப்பு உயரும். தந்தைவழி உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். கொடுக்கல், வாங்கலில் எச்சரிக்கை வேண்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மிருகசீரிஷம் : மதிப்புகள் உயரும்.

திருவாதிரை : அனுசரித்து செல்லவும்.

புனர்பூசம் : விவாதங்களை தவிர்க்கவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

உயர் அதிகாரிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புதிய நபர்களால் அலைச்சல்கள் ஏற்படும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்க காலதாமதமாகும். குடும்ப உறுப்பினர்களிடம் பயனற்ற பேச்சுக்களை தவிர்ப்பது சுபமாகும். உடைமைகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : அனுகூலமான நாள்.

பூசம் : அலைச்சல்கள் உண்டாகும்.

ஆயில்யம் : கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

செய்யும் செயல்களில் நிதானம் வேண்டும். எண்ணிய செயலை செய்து முடிப்பதில் சில காலதாமதம் உண்டாகலாம். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். புதிய முயற்சிகள் செய்வதில் சிந்தித்து செயல்படவும். பணியில் பிறரின் அவச்சொல்லிற்கு ஆளாக நேரிடலாம்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : காலவிரயம் நேரிடலாம்.

பூரம் : அனுசரித்து செல்லவும்.

உத்திரம் : விவேகத்துடன் செயல்படவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

செய்யும் செயல்களில் வேகம் அதிகரிக்கும். வியாபாரம் சம்பந்தமான பிரச்சனைகள் குறையும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கைக்கு வரும். கணவன், மனைவிக்கிடையே சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பணியில் ஒருவிதமான குழப்பமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : வெள்ளை நிறம்

அஸ்தம் : பிரச்சனைகள் குறையும்.

சித்திரை : குழப்பம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

தொழில் சம்பந்தமான முடிவுகளில் உறவுகளின் ஆதரவு கிடைக்கும். திட்டமிட்ட பணிகள் இனிதே நடைபெறும். பணியில் உயர் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். பிள்ளைகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புதிய மனை வாங்குவது பற்றிய சிந்தனைகள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : ஆதரவுகள் கிடைக்கும்.

சுவாதி : சாதகமான நாள்.

விசாகம் : சிந்தனைகள் மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

செய்கின்ற பணியில் திருப்தியான சூழ்நிலை அமையும். மனை சம்பந்தமான விவகாரங்களில் சுமூகமான முடிவுகள் கிடைக்கும். பயணங்கள் தொடர்பான செயல்களில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை களைவீர்கள். பொருளாதார முன்னேற்றம் தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

விசாகம் : திருப்தியான நாள்.

அனுஷம் : எதிர்ப்புகள் விலகும்.

கேட்டை : முயற்சிகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். எதிர்பாராத தனவரவுகளால் மேன்மையான சூழ்நிலை அமையும். நண்பர்களிடத்தில் இருந்துவந்த மனக்கசப்புகள் அகலும். பூமி விருத்திக்கான பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மூலம் : இன்பமான நாள்.

பூராடம் : மனக்கசப்புகள் அகலும்.

உத்திராடம் : அலைச்சல்கள் ஏற்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

தம்பதிகளுக்கிடையே புரிதல் உணர்வு அதிகரிக்கும். கூட்டாளிகளால் பொருள் இலாபம் உண்டாகும். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் சுபிட்சம் உண்டாகும். சம வயதினரால் நன்மைகள் ஏற்படும். பொன், பொருள் சேர்க்கைக்கான எண்ணங்கள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

உத்திராடம் : புரிதல் உண்டாகும்.

திருவோணம் : இலாபகரமான நாள்.

அவிட்டம் : நன்மை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

செய்கின்ற பணியில் இடமாற்றம் ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பாலின மக்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும்.எண்ணிய செயலை முடிப்பதில் துரிதம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அவிட்டம் : இடமாற்றம் ஏற்படலாம்.

சதயம் : இன்னல்கள் குறையும்.

பூரட்டாதி : ஆரோக்கியம் மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

கலை சம்பந்தமான அறிவால் முன்னேற்றமான சூழல் ஏற்படும். சபைகளில் எதிர்பார்த்த ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும். சாதுர்யமான பேச்சுக்களால் பிரச்சனைகளை பேசி முடிப்பீர்கள். வெளியூர் பயணங்களில் எதிர்பார்த்த பலன்கள் சாதகமாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

பூரட்டாதி : முன்னேற்றமான நாள்.

உத்திரட்டாதி : மகிழ்ச்சி உண்டாகும்.

ரேவதி : எண்ணங்கள் ஈடேறும்.

•┈┈•❀??????❀•┈┈•