*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_ஐப்பசி 05_*
*22.10.2019*
*_செவ்வாய்க்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
வாக்குவன்மையால் பெருமை அடைவீர்கள். வெளியூர் பயணங்களால் நற்செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் நீங்கும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான காரியங்களில் தந்தையின் ஆதரவு கிடைக்கும். பணியில் உள்ளவர்களின் மதிப்பு உயரும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அஸ்வினி : பெருமை அடைவீர்கள்.
பரணி : இன்னல்கள் நீங்கும்.
கிருத்திகை : மதிப்பு உயரும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
அரசாங்கத்திடமிருந்து அனுகூலமான செய்திகள் கிடைக்க பெறுவீர்கள். நிறுவனங்களில் சவாலான பணிகளில் ஈடுபட்டு அனைவராலும் புகழப்படுவீர்கள். ஆபரணச்சேர்க்கைக்கான செயல் திட்டம் வகுப்பீர்கள். கடிதத்தின் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். புதிய வேலைக்கான முயற்சிகள் ஈடேறும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
கிருத்திகை : அனுகூலம் உண்டாகும்.
ரோகிணி : புகழப்படுவீர்கள்
மிருகசீரிஷம் : முயற்சிகள் ஈடேறும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
கணவன், மனைவிக்கிடையே உள்ள வாக்குவாதம் குறைந்து அன்பு அதிகரிக்கும். மனக்கவலைகள் குறைந்து புத்துணர்ச்சி பெறுவீர்கள். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் மேன்மையான சூழல் உண்டாகும். தலைமை பொறுப்பிற்கான முயற்சிகள் ஈடேறும். கடல்வழி பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மிருகசீரிஷம் : அன்பு அதிகரிக்கும்.
திருவாதிரை : புத்துணர்ச்சி பிறக்கும்.
புனர்பூசம் : ஆதாயம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
உத்தியோகஸ்தரர்கள் உடன் பணிபுரியும் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். நிலுவையில் இருந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருப்பது நன்மையை அளிக்கும். புதுவிதமான எண்ணங்களால் வீண் அலைச்சல்கள் மற்றும் குழப்பம் நேரிடலாம்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.
பூசம் : நிதானம் வேண்டும்.
ஆயில்யம் : அலைச்சல்கள் நேரிடலாம்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
பணியில் உள்ளவர்களுக்கு வீண் கவலைகள் தோன்றும். செயல்பாடுகளில் சிறிது கவனம் வேண்டும். தொழில் சம்பந்தமான இடப்பெயர்ச்சி உண்டாகும். தம்பதிகளுக்கிடையே அனுசரித்து செல்லவும். பெரியோர்களின் ஆதரவால் தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : கவலைகள் தோன்றும்.
பூரம் : இடப்பெயர்ச்சி உண்டாகும்.
உத்திரம் : அனுசரித்து செல்லவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
பிள்ளைகளின் மூலம் சுபவிரயம் ஏற்படும். பூர்வீகச் சொத்துக்களால் நன்மை உண்டாகும். தொழிலில் பொறுப்புகள் அதிகரிக்கும். செய்யும் பணியில் நிதானம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் அமைதியாக நடந்து கொள்ளவும். வாகனப் பயணம் தொடர்பான செயல்களில் இலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : சுபவிரயம் உண்டாகும்.
அஸ்தம் : நிதானம் வேண்டும்.
சித்திரை : இலாபம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
தாயின் ஆதரவினால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். புண்ணிய யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். குடும்பத்தில் பொருளாதார மேன்மை உண்டாகும். உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
சித்திரை : மகிழ்ச்சி உண்டாகும்.
சுவாதி : ஆசிகள் கிடைக்கும்.
விசாகம் : அனுகூலமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
அரசு அதிகாரிகளின் மூலம் அனுகூலமான சூழ்நிலை ஏற்படும். தைரியமான செயல்பாடுகளால் திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். பூமி விருத்திக்கான பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
விசாகம் : காரியசித்தி உண்டாகும்.
அனுஷம் : தன்னம்பிக்கை மேம்படும்.
கேட்டை : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
செய்யும் வேலைகளில் சில தடங்கல்கள் தோன்றி மறையும். வியாபார ரீதியாக கொடுக்கல், வாங்கலில் நிதானம் வேண்டும். புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது சிந்தித்து செயல்படவும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : தடைகள் தோன்றும்.
பூராடம் : நிதானம் வேண்டும்.
உத்திராடம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
உடல் ஆரோக்கியத்திற்கான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். மனச்சோர்வால் வேலையில் கவனமின்றி செயல்பட்டு வசைச் சொற்களுக்கு ஆளாக நேரிடும். புதிய இலக்கு மற்றும் அதை செயல்படுத்துவதற்கான ஆதரவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
உத்திராடம் : ஆரோக்கியம் மேம்படும்.
திருவோணம் : கவனம் வேண்டும்.
அவிட்டம் : ஆதரவுகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
குடும்ப உறுப்பினர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். நிர்வாகத்தில் சாதகமற்ற சூழல் ஏற்படும். மனைவியின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். வெளியூர் பயணங்களால் புதுவிதமான அனுபவம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அவிட்டம் : விவேகம் வேண்டும்.
சதயம் : ஆசைகள் ஈடேறும்.
பூரட்டாதி : புதிய அனுபவம் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
உறவினர்களிடம் இருந்து சுபச்செய்திகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். விவாதங்களில் ஆதரவான சூழல் உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு திறமைகள் வெளிப்படும். பொருளாதார மேன்மைக்கான புதிய சிந்தனைகள் தோன்றும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
பூரட்டாதி : சுபமான நாள்.
உத்திரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.
ரேவதி : திறமைகள் வெளிப்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
