*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_புரட்டாசி 28_*

*15.10.2019*
*_செவ்வாய்க்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

எதிர்பார்த்த காரியங்கள் எண்ணியவாறு நடைபெறும். மனோதைரியம் அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். செய்யும் பணியில் மேன்மையான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அஸ்வினி : தைரியம் அதிகரிக்கும்.

பரணி : முன்னேற்றமான நாள்.

கிருத்திகை : மேன்மை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். உத்தியோகம் சம்பந்தமான புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வெளியூர் மற்றும் வெளிநாட்டு பயணங்கள் செல்ல எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

கிருத்திகை : தெளிவு பிறக்கும்.

ரோகிணி : வெற்றி கிடைக்கும்.

மிருகசீரிஷம் : முயற்சிகள் ஈடேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

பிள்ளைகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் நண்பர்களால் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். எண்ணிய செயலை எண்ணியவாறு செய்து முடிப்பீர்கள். புதிய ஆராய்ச்சி சம்பந்தமான தேடல் உருவாகும். உயர் அதிகாரிகளால் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.

திருவாதிரை : வாய்ப்புகள் உண்டாகும்.

புனர்பூசம் : தேடல் உருவாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

புதிய வாகனம் மற்றும் சொத்துக்கள் வாங்குவதற்கான எண்ணங்கள் மேலோங்கும். உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். பொறுமையுடன் செயல்பட்டு திட்டமிட்ட காரியங்களை செயல்படுத்தவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், கூடுதல் பொறுப்புகளும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

புனர்பூசம் : எண்ணங்கள் மேம்படும்.

பூசம் : மனக்கசப்புகள் நீங்கும்.

ஆயில்யம் : உயர்வு உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

வியாபாரத்தில் அதிரடியான மாற்றங்களை செய்வீர்கள். சுயதொழில் சம்பந்தமான முயற்சிகள் மேலோங்கும். மனதில் புதுவிதமான, வித்தியாசமான எண்ணங்கள் தோன்றும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழில் சம்பந்தமான புதிய முடிவுகளை எடுப்பதில் கவனத்துடன் இருக்கவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : மாற்றங்கள் உண்டாகும்.

பூரம் : ஆரோக்கியம் மேம்படும்.

உத்திரம் : கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

புதிய நபர்களிடம் உரையாடும்போது நிதானம் வேண்டும். குடும்ப பிரச்சனைகளில் மற்றவர்களின் தலையீட்டை தவிர்க்கவும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்க காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தலைமை பதவியில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திரம் : விவேகம் வேண்டும்.

அஸ்தம் : தலையீடுகளை தவிர்க்கவும்.

சித்திரை : அனுசரித்து செல்லவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

தானிய சம்பத்துகளால் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். புதிய இலக்கை அடைவதற்கான முயற்சிகள் வெற்றியை தரும். பிரபலங்களின் அறிமுகத்தால் சாதகமான சூழல் உண்டாகும். நெருக்கமானவர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

சித்திரை : இலாபம் உண்டாகும்.

சுவாதி : சாதகமான நாள்.

விசாகம் : தனவரவுகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

எதிர்பாலின மக்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். அறிமுகமில்லாதவர்களுக்கு உதவும்போது கவனம் வேண்டும். கொடுத்த கடன்கள் வசூலாகும். நிர்வாகத்தில் உங்களின் தனித்திறமைகள் புலப்படும். நண்பர்களின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும். எதிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு இலாபம் மற்றும் மகிழ்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

விசாகம் : அனுகூலமான நாள்.

அனுஷம் : கவனம் வேண்டும்.

கேட்டை : மகிழ்ச்சியான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

சபைகளில் ஆதரவுகள் அதிகரிக்கும். கல்வி கற்கும் மாணவர்களுக்கு சாதகமான நாள். செய்தொழிலில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். உடல்சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். பணியில் முயற்சிக்கேற்ற அங்கீகாரமும், பாராட்டுகளும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மூலம் : ஆதரவுகள் அதிகரிக்கும்.

பூராடம் : சாதகமான நாள்.

உத்திராடம் : இலாபம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

தொழில் சார்ந்த அலைச்சல்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகம் சார்ந்த சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் மற்றும் மாற்றங்களை செய்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திராடம் : அனுகூலம் உண்டாகும்.

திருவோணம் : மாற்றங்களை செய்வீர்கள்.

அவிட்டம் : மனக்கசப்புகள் நீங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

புதுவிதமான எண்ணங்களும், அதற்கான முயற்சிகளும் மேம்படும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். மனக்கவலைகள் குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

அவிட்டம் : முயற்சிகள் மேம்படும்.

சதயம் : தனலாபம் உண்டாகும்.

பூரட்டாதி : துரிதம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

பொருட்களை சேர்ப்பதற்கான சாதகமான சூழல் உண்டாகும். புதிய தொழில் முயற்சிகளால் சுபவிரயம் ஏற்படும். புதிய நபர்களுடன் வாக்குவாதத்தை தவிர்க்கவும். வருங்காலம் சார்ந்த பணிகள் நிறைவேறும். உயர் அதிகாரிகளிடம் அமைதியுடன் செயல்படவும். போட்டிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

பூரட்டாதி : சாதகமான நாள்.

உத்திரட்டாதி : சுபவிரயம் உண்டாகும்.

ரேவதி : வெற்றி கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•