*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_ஆடி 08_*

*24.07.2019*
*_புதன்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

புதிய நபர்களின் நட்பால் தொழிலில் அபிவிருத்தி உண்டாகும். புதியவற்றை கண்டறிந்து புகழப்படுவீர்கள். சக பணியாளர்களால் தொழிலில் சாதகமான சூழல் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகளால் இலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

அசுவினி : அபிவிருத்தி உண்டாகும்.

பரணி : புகழப்படுவீர்கள்.

கிருத்திகை : அனுகூலமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

காதில் உண்டான பிரச்சனைகளில் வேதனைகள் குறையும். மறைப்பொருள் சம்பந்தமான ஞானத் தேடல் உண்டாகும். தர்ம ஸ்தாபனங்களின் உதவியால் நிர்வாகிகளுக்கு ஆதரவு கிடைக்கும். நண்பர்களிடம் உரையாடும்போது பேச்சில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : வேதனைகள் குறையும்.

ரோகிணி : தேடல் பிறக்கும்.

மிருகசீரிடம் : ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

புதிய எண்ணங்களாலும், சாதகமான முயற்சியாலும் பொருட்சேர்க்கை உண்டாகும். போட்டிகளில் இலாபம் அடைவீர்கள். பங்காளிகளுக்கு இடையேயான உறவுநிலை மேம்படும். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். நினைவாற்றல் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிடம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.

திருவாதிரை : உறவுநிலை மேம்படும்.

புனர்பூசம் : நினைவாற்றல் மேலோங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

மனை சம்பந்தமான தொழில் முயற்சிகள் நல்ல பலனைத் தரும். வாகனப் பயணங்களால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். தாயின் உதவியால் சாதகமான சூழல் அமையும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். கல்வி பயிலும் மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

புனர்பூசம் : முயற்சிகள் ஈடேறும்.

பூசம் : சாதகமான நாள்.

ஆயில்யம் : ஆசிகள் கிடைக்கும்

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

எதிர்பார்த்த கடன் உதவிகள் சாதகமாக அமையும். பிறருக்கு உதவும்போது எச்சரிக்கையுடன் செயல்படவும். முக்கிய முடிவுகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். இளைய சகோதரர்களிடம் அனுகூலமாக நடந்து கொள்ளவும். குடும்பத்தில் ஏற்பட்ட சச்சரவுகள் நீங்கி அமைதி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

மகம் : சாதகமான நாள்.

பூரம் : நிதானம் வேண்டும்.

உத்திரம் : இன்னல்கள் நீங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

புதிய முயற்சிகளில் காலதாமதம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அனுசரித்து செல்லவும். பணிபுரியும் இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும். பேச்சில் கவனம் வேண்டும். அஞ்ஞான எண்ணங்கள் மேலோங்கும். எதிலும் நிதானத்துடனும், பொறுமையுடனும் செயல்பட வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

உத்திரம் : செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

அஸ்தம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

சித்திரை : அமைதி வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

தொழிலில் மேற்கொள்ளும் புதிய யுக்திகளால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். ஆபரணச்சேர்க்கை உண்டாகும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் உங்களின் மரியாதை உயரும். சொந்த பந்தங்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். திருமண வரன் தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

சித்திரை : இலாபகரமான நாள்.

சுவாதி : மதிப்புகள் உயரும்.

விசாகம் : மகிழ்ச்சி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

பொது நலத்திற்காக நன்கொடைகள் அளித்து மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்திற்கான மருத்துவ செலவுகள் உண்டாகலாம். பூஜை புனஸ்காரங்களில் மனம் ஈடுபடும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். திருமண வரன்கள் சாதகமாக அமையும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

விசாகம் : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

அனுஷம் : புதிய நட்பு கிடைக்கும்.

கேட்டை : உயர்வான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

பிள்ளைகளின் செயல்பாட்டால் இலாபம் உண்டாகும். பழைய நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். உடன் பிறப்புகளால் ஆதாயம் உண்டாகும். தொழில் சம்பந்தமான சில சூட்சமங்களை கற்பீர்கள். கலைஞர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

மூலம் : இலாபம் உண்டாகும்.

பூராடம் : ஆதரவு கிடைக்கும்.

உத்திராடம் : சூட்சமங்களை கற்பீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

வெளிநாட்டு தொழில் தொடர்பான முயற்சிகளில் எண்ணிய பலன்கள் கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். தைரியத்துடன் புதிய காரியங்களை மேற்கொள்வீர்கள். பணிபுரியும் இடங்களில் செல்வாக்கு மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திராடம் : வெற்றி கிடைக்கும்.

திருவோணம் : சிந்தனைகள் மேம்படும்.

அவிட்டம் : முன்னேற்றம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

சங்கீத இசைக் கலைஞர்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். திடீர் யோகத்தால் எதிர்பாராத பலன்கள் கிடைக்கும். மனக்கவலைகள் தீர்ந்து மகிழ்ச்சி அடைவீர்கள். இணையதளம் சம்பந்தமான வேலைவாய்ப்புகளினால் மேன்மை உண்டாகும். மனைகளில் வீடு கட்டும் பணிகளை தொடங்குவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்

அவிட்டம் : சாதகமான நாள்.

சதயம் : மகிழ்ச்சி அடைவீர்கள்.

பூரட்டாதி : மேன்மை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். புதிய நபர்களின் நட்பால் தனலாபம் அடைவீர்கள். கணவன், மனைவியின் உறவில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். சபைகளில் ஆதரவு பெருகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு பயிலும் விதங்களில் மாற்றங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

பூரட்டாதி : தனலாபம் உண்டாகும்.

உத்திரட்டாதி : ஒற்றுமை மேலோங்கும்.

ரேவதி : மாற்றமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•