*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_ஆடி 07_*

*23.07.2019*
*_செவ்வாய்க்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

இழுபறியாக இருந்து வந்த காரியங்கள் இனிதே நிறைவேறும். பொருளாதார மேம்பாட்டிற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். வாக்குறுதிகளால் கீர்த்தி உண்டாகும். புதிய இலக்கை நிர்ணயம் செய்து அதை செயல்படுத்துவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

அசுவினி : எண்ணங்கள் நிறைவேறும்.

பரணி : பொருளாதாரம் மேம்படும்.

கிருத்திகை : இலாபம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

உறவுகளிடம் அமைதியுடன் செயல்படவும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் சில பிரச்சனைகள் ஏற்படும். சர்வதேச வணிகம் சம்பந்தமான முதலீடுகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

கிருத்திகை : அமைதியுடன் செயல்படவும்.

ரோகிணி : பிரச்சனைகள் ஏற்படும்.

மிருகசீரிடம் : முதலீடுகளில் கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு முக்கிய முடிவுகளை எடுக்கவும். தடைப்பட்ட காரியங்களை செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். பணி சம்பந்தமான முயற்சிகளில் எண்ணிய இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மிருகசீரிடம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

திருவாதிரை : வாய்ப்புகள் உண்டாகும்.

புனர்பூசம் : எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

கலை சார்ந்த அறிவு மேம்படும். அறச்செயல்களால் மனமகிழ்ச்சி உண்டாகும். புதிய நபர்களிடம் கவனத்துடன் செயல்படவும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் மேன்மை உண்டாகும். பூமி விருத்திக்கான பணிகளில் இருந்து வந்த தடை, தாமதங்கள் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

புனர்பூசம் : ஞானம் மேம்படும்.

பூசம் : மேன்மை உண்டாகும்.

ஆயில்யம் : தடைகள் நீங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிப்புகளை அதிகப்படுத்துவீர்கள். உயர் அதிகாரிகளுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். எதிர்பார்த்த உதவிகளால் அனுகூலம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

மகம் : இன்னல்கள் குறையும்.

பூரம் : மனக்கசப்புகள் நீங்கும்.

உத்திரம் : அனுகூலமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

கல்வி பயிலும் மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். பொருட்சேர்க்கை உண்டாகும். புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் நிலவும். தாய்வழி உறவுகளால் மேன்மை உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் நற்பெயர்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திரம் : புத்திக்கூர்மை வெளிப்படும்.

அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.

சித்திரை : மேன்மை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். புதிய தொழில் சம்பந்தமான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். சுபச் செய்திகளால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். வாகனங்களில் ஏற்படும் பழுதுகளால் வீண் செலவுகள் உண்டாகும். அலைச்சல்கள் மற்றும் பயணச் செலவுகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்

சித்திரை : கவனம் வேண்டும்.

சுவாதி : மகழ்ச்சி உண்டாகும்.

விசாகம் : செலவுகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

தந்தைவழி சொத்துக்களை மாற்றியமைப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். வாகனங்கள் வாங்குவதற்கான கடன் உதவிகள் கிடைக்கும். புதிய உத்வேகத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

விசாகம் : சொத்துச்சேர்க்கை உண்டாகும்.

அனுஷம் : உதவிகள் கிடைக்கும்.

கேட்டை : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

தொழிலில் இருந்து வந்த எதிர்ப்புகள் குறையும். புதிய முயற்சிகளில் எண்ணிய இலாபம் கிடைக்கும். ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவீர்கள். சக ஊழியர்களிடம் நிதானப்போக்கை கையாளவும். தொழில் சம்பந்தமான விஷயங்களை எவரிடமும் பகிர வேண்டாம்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மூலம் : எதிர்ப்புகள் குறையும்.

பூராடம் : இலாபம் கிடைக்கும்.

உத்திராடம் : நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

உயர் அதிகாரிகளால் அனுகூலமான செயல்கள் நடைபெறும். பொது நலத்திற்கான எண்ணங்கள் மேலோங்கும். தொலைதொடர்பு சம்பந்தமான துறையில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : எண்ணங்கள் மேலோங்கும்.

திருவோணம் : உயர்வு உண்டாகும்.

அவிட்டம் : இலாபம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

குலதெய்வ வழிபாட்டில் பங்கேற்பீர்கள். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களில் இருந்த தடைகள் அகலும். சாதுர்யமான பேச்சுக்களால் அனைவரையும் கவர்வீர்கள். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

சதயம் : பேச்சுகளால் இலாபம் உண்டாகும்.

பூரட்டாதி : ஆசிகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

நண்பர்களின் உதவியால் ஆதாயமான சூழல் உண்டாகும். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வாதத்திறமையால் மாற்றமான சூழல் உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனக்கவலைகள் நீங்கி அமைதி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : ஆதாயம் உண்டாகும்.

உத்திரட்டாதி : மாற்றம் ஏற்படும்.

ரேவதி : அமைதி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•