*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_ஆனி 24_*

*09.07.2019*
*_செவ்வாய்க்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எடுத்துச் செல்லும் உடைமைகளின் மீது கவனம் வேண்டும். வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

அசுவினி : சாதகமான நாள்.

பரணி : கவனம் வேண்டும்.

கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

உடன்பிறந்தவர்களிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும். பணியில் ஏற்பட்ட எதிர்ப்புகள் குறைந்து சுமூகமான நிலை உண்டாகும். செய்யும் செயல்களில் திருப்தியான சூழல் நிலவும். கலை அறிவு மேம்படும். குழந்தைகளால் மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

கிருத்திகை : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.

ரோகிணி : திருப்தியான சூழல் உண்டாகும்.

மிருகசீரிடம் : அறிவு மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

தொழில் சம்பந்தமான பயணங்களில் உறவினர்களின் ஆதரவால் அனுகூலம் உண்டாகும். உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வீடு, மனை வாங்குவதற்கான எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். மனைவியின் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

மிருகசீரிடம் : ஆதரவு உண்டாகும்.

திருவாதிரை : உதவிகள் கிடைக்கும்.

புனர்பூசம் : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

அரசு தொடர்புடைய செயல்களில் அனுகூலம் உண்டாகும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் ஏற்படும். செய்த செயல்களுக்கு மதிப்பும், மரியாதையும் உண்டாகும். கூட்டாளிகளின் மூலம் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். கலகலப்பான சூழலால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

புனர்பூசம் : அனுகூலம் உண்டாகும்.

பூசம் : மரியாதை உயரும்.

ஆயில்யம் : இன்பமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

குடும்ப உறுப்பினர்களுக்கிடையே சில மனக்கசப்புகள் தோன்றலாம். புத்திரர்களிடம் அன்பாக பேசி அரவணைக்கவும். பெரியோர்களிடம் நிதானத்துடன் உரையாடவும். கொடுக்கல்-வாங்கலில் சிறிது கவனம் வேண்டும். பணி சம்பந்தமான இடமாற்றம் நேரிடும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

மகம் : கனிவு வேண்டும்.

பூரம் : நிதானத்துடன் உரையாடவும்.

உத்திரம் : இடமாற்றம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களுடன் விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகளை தீர்க்க முயல்வீர்கள். செய்யும் தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். நிர்வாக ஆற்றல் வெளிப்பட்டு அனைவராலும் பாராட்டப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.

அஸ்தம் : இன்னல்கள் குறையும்.

சித்திரை : பாராட்டப்படுவீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

பெருந்தன்மையான செயல்பாடுகளால் அனைவராலும் மதிக்கப்படுவீர்கள். தம்பதிகளுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து உறவுநிலை பலப்படும். திருமண வரன் தேடுபவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். தொழில் சார்ந்த பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : மதிப்புகள் உயரும்.

சுவாதி : உறவுநிலை பலப்படும்.

விசாகம் : அனுகூலம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் நற்பெயர்கள் கிடைக்கும். எண்ணிய செயலில் இருந்து வந்த இடர்பாடுகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். இறை வழிபாட்டில் மனம் ஈடுபடும். பணியில் புதிய வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

விசாகம் : நற்பெயர்கள் கிடைக்கும்.

அனுஷம் : சுபிட்சம் உண்டாகும்.

கேட்டை : வாய்ப்புகள் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் சிறிது காலதாமதம் நேரிடலாம். சக ஊழியர்களிடம் வீண் விவாதங்களை தவிர்த்து அமைதி காக்கவும். அக்கம், பக்கம் வீட்டார்களினால் சாதகமற்ற சூழல் அமையும். விளையாட்டு வீரர்களுக்கு உடல் நலத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மூலம் : காலதாமதம் நேரிடலாம்.

பூராடம் : அமைதி காக்கவும்.

உத்திராடம் : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

தந்தையுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் குறையும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். பணியில் இருந்து வந்த மந்தத்தன்மை நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும். புதிய கண்டுபிடிப்புகளின் மூலம் தொழிலில் புதிய வாய்ப்புகள் மற்றும் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : மனக்கசப்புகள் குறையும்.

திருவோணம் : சுறுசுறுப்பு உண்டாகும்.

அவிட்டம் : மகிழ்ச்சி உண்டாகும்

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

புதிய சூழலை அனுசரித்து நடந்து கொள்ளவும். அந்நியர்களிடம் பேசும்போது கவனம் வேண்டும். பணியில் எதிர்பாராத தடை, தாமதங்கள் உண்டாகலாம். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற கருத்துகள் தெரிவிப்பதை தவிர்க்கவும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நன்மையை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : விவேகத்துடன் செயல்படவும்.

சதயம் : பேச்சில் கவனம் வேண்டும்.

பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

சர்வதேச வணிகம் சம்பந்தமான முயற்சிகளில் இலாபம் அடைவீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்கவும். தொழில் திறமையால் புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். உறவுகளின் ஆதரவால் உயர்வான சூழல் உண்டாகும். வாகனப் பயணங்களால் இலாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

பூரட்டாதி : இலாபம் அதிகரிக்கும்.

உத்திரட்டாதி : உயர்வு உண்டாகும்.

ரேவதி : ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•