*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_வைகாசி 06_*

*20.05.2019*
*_திங்கட்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

தைரியம் மற்றும் நிதானத்துடன் மனதில் எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். செய்யும் வேலைகளில் கவனமாக இருக்கவும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். விலையுயர்ந்த பொருட்களை கையாளும்போது எச்சரிக்கை வேண்டும். எண்ணிய கடனுதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அசுவினி : தைரியம் அதிகரிக்கும்.
பரணி : காரியசித்தி உண்டாகும்.
கிருத்திகை : பணிகளில் கவனம் தேவை.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

தொழிலில் நீங்கள் கையாளும் புதுவிதமான யுக்திகளால் சாதகமான சூழல் உண்டாகும். பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். மனைகளால் சுப விரயம் உண்டாகும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். புதிய சிந்தனைகள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

கிருத்திகை : முயற்சிகள் கைக்கூடும்.
ரோகிணி : அனுசரித்துச் செல்லவும்.
மிருகசீரிடம் : எண்ணங்கள் ஈடேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம் :-*

வெளியூர் வேலைவாய்ப்புகள் எண்ணிய பலனை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். இழந்த பொருட்களை மீட்பதற்கான தன உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மிருகசீரிடம் : எண்ணங்கள் மேலோங்கும்.
திருவாதிரை : புதிய நட்பு கிடைக்கும்.
புனர்பூசம் : மகிழ்ச்சியான சூழல் அமையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

கடல் மார்க்க பயணங்களால் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். கால்நடைகளால் இலாபம் உண்டாகும். புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். நண்பர்களின் மூலம் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். தொழில் சார்ந்த முயற்சிகளால் தனலாபம் உண்டாகும். வாதம் புரிதலில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

புனர்பூசம் : புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.
பூசம் : தனலாபம் உண்டாகும்.
ஆயில்யம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம் :-*

பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். தூர தேச பயணங்களில் ஏற்பட்ட சிக்கல்கள் குறையும். பணிகளில் உள்ளவர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். முயற்சியால் சேமிப்புகள் உயரும். வாக்குறுதிகளை காப்பாற்றியதால் கீர்த்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மகம் : ஆசிகள் கிடைக்கும்.
பூரம் : சிக்கல்கள் குறையும்.
உத்திரம் : கீர்த்தி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி :-*

செய்யும் வேலைகளில் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர்களுடன் விருந்தில் கலந்து கொள்வீர்கள். புனித யாத்திரை செல்வதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். வெளியூர் பயணங்களில் எச்சரிக்கை தேவை.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : பணியில் கவனம் தேவை.
அஸ்தம் : அனுகூலமான நாள்.
சித்திரை : பயணங்களில் எச்சரிக்கை தேவை.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

தாய்வழி உறவுகளிடம் நிதானத்துடன் செயல்படவும். கடல் மார்க்க பயணங்களால் இலாபம் உண்டாகும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஆராய்ச்சி சம்பந்தமான பணியில் ஈடுபடுபவர்களுக்கு எண்ணிய முடிவுகள் கிடைக்க காலதாமதமாகும். நண்பர்களிடம் வீண் வாதங்களை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : கவனம் தேவை.
சுவாதி : இலாபம் உண்டாகும்.
விசாகம் : காலதாமதமாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

புதிய சிந்தனைகள் தோன்றும். போட்டிகளில் ஈடுபடும்போது கவனமாக இருத்தல் வேண்டும். எதிர்பார்த்த கடன் வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. திட்டமிட்ட முயற்சிகளால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

விசாகம் : புதிய சிந்தனைகள் தோன்றும்.
அனுஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
கேட்டை : கவலைகள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு :-*

தொழிலில் இழந்த பொருட்களை மீட்பதற்கான சூழல் உண்டாகும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட உதவிகள் கிடைக்கும். பணிபுரியும் இடங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

மூலம் : உதவிகள் கிடைக்கும்.
பூராடம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேளாண்மையில் ஏற்பட்ட தேக்க நிலை நீங்கும். இறைபணிக்காக நன்கொடைகளை கொடுத்து மனம் மகிழ்வீர்கள். சொத்துச்சேர்க்கை உண்டாகும். பெரியோர்களின் ஆதரவினால் பூர்வீகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். சேமிப்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

உத்திராடம் : கவலைகள் குறையும்.
திருவோணம் : சேமிப்பு அதிகரிக்கும்.
அவிட்டம் : பிரச்சனைகள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

பேச்சுகளால் இலாபம் அடைவீர்கள். புதிய உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். சம வயதினரிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். தொழில் சார்ந்த பயணங்களின் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்

அவிட்டம் : இலாபம் அடைவீர்கள்.
சதயம் : விவேகத்துடன் செயல்படவும்.
பூரட்டாதி : தொழில் திறமை வெளிப்படும்

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

கடிதத்தின் மூலம் சாதகமான செய்திகள் கிடைக்கும். இறைவழிபாட்டால் மகிழ்ச்சி உண்டாகும். வாகனப் பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். மனக்கவலைகள் குறைவதற்கான சூழல் அமையும். பதவி உயர்வால் மனம் மகிழ்வீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

பூரட்டாதி : முயற்சிகள் கைக்கூடும்.
உத்திரட்டாதி : சாதகமான செய்திகள் கிடைக்கும்.
ரேவதி : மேன்மை உண்டாகும்

•┈┈•❀??????❀•┈┈•