*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_சித்திரை 06_*

*_19.04.2019_*
*_வெள்ளிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

எதிர்பார்த்த காரியம் எண்ணியவாறு நடைபெறும். மனோ தைரியம் அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். செய்யும் பணியில் மேன்மையான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

அசுவினி : தைரியம் அதிகரிக்கும்.
பரணி : தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.
கிருத்திகை : மேன்மை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

எதிர்பாலின மக்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். அறிமுகமில்லாதவர்களுக்கு உதவும்போது கவனம் வேண்டும். கொடுத்த கடன் வசூலாகும். நிர்வாகத்தில் தனித்திறமை வெளிப்படும். நண்பர்களின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும். எதிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு இலாபம் மற்றும் மகிழ்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

கிருத்திகை : அனுகூலமான நாள்.
ரோகிணி : கவனம் வேண்டும்.
மிருகசீரிடம் : மகிழ்ச்சியான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

பிள்ளைகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். நண்பர்களால் வியாபாரத்தில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். எண்ணிய செயலை எண்ணியவாறு செய்து முடிப்பீர்கள். புதிய ஆராய்ச்சி சம்பந்தமான தேடல் உருவாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மிருகசீரிடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவாதிரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
புனர்பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

புதிய வாகனம் மற்றும் சொத்துகள் வாங்குவதற்கான எண்ணங்கள் தோன்றும். உறவினர்களுக்கிடையே ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். பொறுமையுடன் செயல்பட்டு திட்டமிட்ட காரியங்களை செயல்படுத்தவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், கூடுதல் பொறுப்புகளும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

புனர்பூசம் : எண்ணங்கள் மேலோங்கும்.
பூசம் : மனக்கசப்புகள் நீங்கும்.
ஆயில்யம் : உயர்வு உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

சபைகளில் ஆதரவுகள் அதிகரிக்கும். கல்வி கற்கும் மாணவர்களுக்கு சாதகமான நாள். தொழிலில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். செய்தொழிலில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உடல்சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். பணியில் முயற்சிக்கேற்ற அங்கீகாரமும், பாராட்டுகளும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

மகம் : ஆதரவுகள் அதிகரிக்கும்.
பூரம் : சாதகமான நாள்.
உத்திரம் : இலாபம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

தொழில் சார்ந்த அலைச்சல்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகம் சார்ந்த சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் மற்றும் மாற்றங்களை செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்மஞ்சள்

உத்திரம் : நன்மை உண்டாகும்.
அஸ்தம் : மாற்றங்களை செய்வீர்கள்.
சித்திரை : மனக்கசப்புகள் நீங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டாகும். புதுவிதமான எண்ணங்களும் அதற்கான முயற்சிகளும் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். மனக்கவலைகள் குறைந்து மகிழ்வுடன் காணப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

சித்திரை : முயற்சிகள் மேம்படும்.
சுவாதி : தனலாபம் கிடைக்கும்.
விசாகம் : துரிதம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

வியாபாரத்தில் அதிரடியான மாற்றங்களை செய்வீர்கள். சுயதொழில் சம்பந்தமான முயற்சிகள் மேலோங்கும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழில் சம்பந்தமான புதிய முடிவுகளை எடுப்பதில் கவனத்துடன் இருக்கவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : மாற்றங்கள் உண்டாகும்.
அனுஷம் : ஆரோக்கியம் மேம்படும்.
கேட்டை : கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

தானிய சம்பத்துகளால் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். புதிய இலக்கை அடைவதற்கான முயற்சிகள் வெற்றியை தரும். பிரபலங்களின் அறிமுகத்தால் சாதகமான சூழல் உண்டாகும். தனவரவு மேன்மையை தரும். பணியில் சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

மூலம் : இலாபம் உண்டாகும்.
பூராடம் : வெற்றி கிடைக்கும்.
உத்திராடம் : மேன்மை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

பொருள் சேர்ப்பதற்கான சாதகமான நிலை உண்டாகும். புதிய தொழில் முயற்சிகளால் சுப விரயம் உண்டாகும். புதிய நபர்களிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். வருங்காலம் சார்ந்த பணிகளை மேற்கொள்வீர்கள். உயர் அதிகாரிகளிடம் அமைதியுடன் செயல்படவும். போட்டிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திராடம் : சாதகமான நாள்.
திருவோணம் : சுப விரயம் உண்டாகும்.
அவிட்டம் : வெற்றி கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். சக ஊழியர்களிடம் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோகம் சம்பந்தமான புதிய முயற்சியில் ஜெயம் உண்டாகும். வெளியூர் மற்றும் வெளிநாடு பயணங்கள் செல்ல எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

அவிட்டம் : தெளிவு உண்டாகும்.
சதயம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
பூரட்டாதி : முயற்சிகள் ஈடேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

புதிய நபர்களிடம் உரையாடும்போது நிதானம் வேண்டும். குடும்ப பிரச்சனைகளில் மற்றவர்களின் தலையீட்டை தவிர்க்கவும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்க காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : விவேகம் வேண்டும்.
உத்திரட்டாதி : மற்றவர்களின் தலையீட்டை தவிர்க்கவும்.
ரேவதி : ஆரோக்கியத்தில் கவனம் தேவை

•┈┈•❀??????❀•┈┈•