CCTV( மூன்றாவது கண்) கேமரா உதவியால் சிக்கிய திருடன்

சேலம் மாநகர பள்ளப்பட்டி காவல் சரகம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரபல ஜவுளிக் கடையில் தொடர்ந்து திருடு போவதாக ஜவுளிக் கடையின் மேலாளர் திரு.முருகன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் திரு. சாலை ராம் சக்திவேல் அவர்கள் வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டார். காவல் ஆய்வாளர் அவர்கள் தலைமையில் SI.திரு. அயூப்கான், SSI திரு தமிழரசன், SSI திரு மாதேஸ்வரன், தலைமை காவலர்கள் திரு.ரமேஷ் மற்றும் திரு. செந்தில் ஆகியோர்கள் அடங்கிய குழுவினர் ஜவுளிக் கடையில் உள்ள சிசிடிவி கேமராக்களை  ஆய்வு செய்ததில் திருட்டுகளில் ஈடுபட்டது அதே கடையில் வேலை பார்த்த கருப்பூர் மூங்கில் பாடியை சேர்ந்த ராஜீவ்காந்தி என்பது தெரியவந்தது. மேற்படி குற்றவாளியை 04/04/19 ஆம் தேதி கைது செய்து. சுமார் ரூ 5 .5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மீட்டு குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரி ராஜீவ்காந்தி என்பவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேற்கண்ட வழக்கை சிறப்பாக புலன் விசாரணை செய்த பள்ளப்பட்டி காவல் நிலைய போலீசாரை மாநகர காவல்  ஆணையாளர் அவர்கள் பாராட்டினார்.