24 மணி நேரத்தில் வழிப்பறி கொள்ளையர்களை கண்டுபிடித்த சேலம் அம்மாபேட்டை போலீசாருக்கு பாராட்டு
சேலம் மாநகரம் அம்மாபேட்டை காவல் சரகத்தில் 03/04/19ஆம் தேதி இருசக்கர வாகனத்தை திருடி அந்த வாகனத்தை பயன்படுத்தி 04/04/19தேதி அம்மாபேட்டை காவல் சரகம் பொன்னம்மாபேட்டையில் ஒரு பெண்ணிடம் பர்சை பறித்தது, மற்றும் செவ்வாப்பேட்டை காவல் சரகம் கருங்கல் பட்டியில் ஒரு பெண்ணிடம் 5 பவுன் தங்கச்சங்கிலி பறித்தது என மாநகரில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க வடக்கு சரக உதவி ஆணையர் திரு. தினகரன், அவர்கள் தலைமையில் அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் திரு. கிருஷ்ணமூர்த்தி, உதவி ஆய்வாளர் திரு. சதீஷ் குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. சந்திரசேகர், தலைமை காவலர் திரு.தாமரைச் செல்வன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தனிப்படையினர் 5 .4. 19ஆம் தேதி மதியம் வழிப்பறியில் ஈடுபட்ட சிறார்களை கண்டுபிடித்து அவர்களிடமிருந்து ஒரு இருசக்கர வாகனம், 5 பவுன் தங்கசங்கிலி மற்றும் பணம் ரூ.350 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். குற்றவழக்கில் 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடித்த அம்மாபேட்டை போலீசாரை மாநகரகாவல் ஆணையாளர் அவர்கள் பாராட்டினார்.
