*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_பங்குனி 16_*

*_30.03.2019_*
*_சனிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

பிள்ளைகளின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். பாசன வசதியால் இலாபம் உண்டாகும். பொதுநலத் தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். குலதெய்வ வழிபாடு மனதில் உள்ள குழப்பங்களை நீக்கும். ஆராய்ச்சி சார்ந்த முயற்சிகளில் இழுபறிக்கு பின் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : சுபச் செய்திகள் கிடைக்கும்.
பரணி : இலாபம் உண்டாகும்
கிருத்திகை : வெற்றி கிடைக்கும்.

*☸ரிஷபம்:-*

கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் குறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். இளம் வயதினருக்கு மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த தனலாபம் கிடைக்கும். வழக்காடுவதில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

கிருத்திகை : அன்யோன்யம் அதிகரிக்கும்.
ரோகிணி : தனலாபம் உண்டாகும்.
மிருகசீரிடம் : மாற்றம் பிறக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

உத்தியோகஸ்தரர்கள் பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். நண்பர்களிடம் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். அரசியல் பிரமுகர்கள் அமைதிப்போக்கினை கடைபிடிப்பது நல்லது. உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் நடந்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மிருகசீரிடம் : அனுசரித்துச் செல்லவும்.
திருவாதிரை : காலதாமதம் உண்டாகும்.
புனர்பூசம் : அமைதி வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

பணிபுரியும் இடங்களில் மேன்மையான சூழல் உண்டாகும். சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவதால் கீர்த்தி உண்டாகும். பிறரிடம் உங்களின் மதிப்பு உயரும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கலைஞர்களுக்கு சாதகமான நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்

புனர்பூசம் : மேன்மையான சூழல் உண்டாகும்.
பூசம் : கீர்த்தி உண்டாகும்.
ஆயில்யம் : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில் சார்ந்த விவகாரங்களில் விவேகத்துடன் செயல்படவும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். பணிபுரியும் இடங்களில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

மகம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
பூரம் : விவேகத்துடன் செயல்படவும்.
உத்திரம் : அறிமுகம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

பூர்வீக சொத்துகளை கொண்டு புதிய தொழிலை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய முயற்சிகளை தைரியத்துடன் செயல்படுத்துவீர்கள். செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் மேன்மை உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திரம் : முயற்சிகள் ஈடேறும்.
அஸ்தம் : தைரியம் அதிகரிக்கும்.
சித்திரை : நினைவாற்றல் மேலோங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் இலாபம் உண்டாகும். கால்நடைகளை வளர்ப்பவர்களுக்கு சில விரயங்கள் உண்டாகும். சபைகளில் உங்களுக்கு ஆதரவு அதிகரிக்கும். வாகனப் பயணங்களில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்

சித்திரை : பயணங்களில் கவனம் தேவை.
சுவாதி : ஆதரவு அதிகரிக்கும்.
விசாகம் : உதவிகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

தொழில் சம்பந்தமான கடனுதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். பொருட்சேர்க்கை உண்டாகும். செய்யும் வேலைகளில் கவனம் வேண்டும். பெரியோர்களிடம் தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. பொதுக்கூட்ட பேச்சுகளால் ஆதரவு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

விசாகம் : உதவிகள் கிடைக்கும்.
அனுஷம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
கேட்டை : கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

நிர்வாக திறமைகள் வெளிப்படும். மனதில் புதுவித எண்ணங்கள் தோன்றும். பயணங்களால் விரயச் செலவுகள் உண்டாகும். எடுத்துரைக்கின்ற பேச்சுத்திறனால் புகழ் உண்டாகும். குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். பதவி உயர்விற்கான சூழல் உண்டாகலாம்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

மூலம் : திறமைகள் வெளிப்படும்.
பூராடம் : புதிய எண்ணங்கள் தோன்றும்.
உத்திராடம் : புகழ் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

கணவன், மனைவிக்கிடையே சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்க காலதாமதமாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வாக்குவாதங்களில் நிதானம் வேண்டும். பொருட்களை கையாளுவதில் எச்சரிக்கையுடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

உத்திராடம் : முடிவுகள் கிடைக்க காலதாமதமாகும்.
திருவோணம் : உதவிகள் கிடைக்கும்.
அவிட்டம் : நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

மனதில் உள்ள கவலைகள் குறையும். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். பொறுமையுடன் புதிய செயல்திட்டங்களை அமைப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அவிட்டம் : முன்னேற்றம் உண்டாகும்.
சதயம் :கருத்து வேறுபாடுகள் குறையும்.
பூரட்டாதி : மகிழ்ச்சி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். அருள் தரும் வேள்விகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : முன்னேற்றமான நாள்.
உத்திரட்டாதி : வாய்ப்புகள் அமையும்.
ரேவதி : உறவு மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•