அரூரீல் தேர்தலுக்கான பாதுகாப்பு பணிகள் மற்றும் நடத்தை விதி முறைகள் குறித்து சிறப்பு கூட்டம்

அரூர் சட்டமன்ற இடைத்தேர்தல், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் அரூர் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட நாடாளுமன்ற பொதுத்தேர்தல் ஆகியவைகளை முன்னிட்டு இன்று அரூர் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் இதர காவலர்கள் மற்றும் போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் முதல் காவலர்கள் வரை ஆகிய அனைவருக்கும் அரூர் காவல் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஏ சி செல்லப்பாண்டியன் மற்றும் அரூர் சட்டமன்ற இடைத் தேர்தல் அதிகாரியும் அரூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் ஆர்டிஓ அவர்களும் ஆன திரு.புண்ணியகோட்டி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற இடைத் தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியரின் நில அளவை நேர்முக உதவியாளர் ஆன திருமதி கீதா ராணி மற்றும் அரூர் வட்டாட்சியர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர், காவல் துறை மற்றும் வருவாய்த் துறை உயர் அதிகாரிகள் அனைவர் முன்னிலையில் காவல் ஆய்வாளர்கள் முதல் காவல் ஆளிநர்கள் வரை வருகின்ற மேற்படி தேர்தலுக்கான பாதுகாப்பு பணிகள் மற்றும் நடத்தை விதி முறைகளை மேற்கொள்வது குறித்து சிறப்பான கூட்டம் அரூர் மண்டபத்தில் இன்று 16. 3.2019 காலை 11.30 மணி முதல் பகல் 1. 30 மணி வரை மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இதில் இதில் அனைத்து காவல் ஆய்வாளர்கள் முதல் காவலர்கள் வரை எந்தவிதமான ஒரு சிறு அசம்பாவிதம் இன்றி மேற்படி இடைத்தேர்தல்கள் மற்றும் பொதுத் தேர்தலை சிறப்பாக நடத்தி முடிக்க அனைத்து உத்திகளையும் மேற்படி அதிகாரிகளிடமிருந்து நன்றாக தெரிந்து கொண்டனர். இந்த கூட்டம் மிகச் சிறப்பாக பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நடைபெற்று முடிந்தது. இந்த கூட்டத்திற்கு வருகை தந்த அனைத்து பத்திரிகையாளர் மற்றும் அனைவருக்கும் அரூர் காவல் உட்கோட்டம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.