பண மோசடி செய்து விட்டு தலைமறைவாயிருந்த குற்றவாளிகள் கைது

14.03.2019 சேலம் மாநகரம் நெத்திமேடு சேர்ந்த மனிஷா என்பவர் கடந்த 2016ஆம் ஆண்டு ஆயிரம் ரூபாய் நோட்டு பணமாற்றம் செய்தபோது சுமார் ஒரு கோடி ரூபாய் பணத்தை 2000 ரூபாய் நோட்டாக மாற்றித் தருவதாக கூறி நான்கு பேர் தன்னை ஏமாற்றிவிட்டதாக  2018 ஆம் ஆண்டு கொடுத்த புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். குற்றவாளிகளை பிடிப்பதற்காக சட்டம்-ஒழுங்கு மேற்கு சரக காவல் உதவி ஆணையர் திரு. செல்வராஜ் அவர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர் திரு. சாலை ராம் சக்திவேல், உதவி ஆய்வாளர் திரு. முரளி, தலைமை காவலர் திரு. கோவிந்தராஜ்  ஆகியோர் அடங்கிய குழு 14/03/19 ஆம் தேதி குற்றவாளிகள் (1) ஜவகர் வயது 44 அன்னதானப்பட்டி (2) ஆறுமுகம் வயது 40 குகை (3) விஜயபாஸ்கர்41 குகை (4) அறிவு (@) அறிவழகன் அன்னதன்பட்டி ஆகிய நான்கு பேரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். துரிதமாக புலன் விசாரணை நடத்திய பள்ளப்பட்டி போலீசாரை காவல் ஆணையர் அவர்கள் பாராட்டி ஊக்குவித்தார்.