*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_மாசி 08_*

*_20.02.2019_*
*_புதன்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் சுபச் செய்திகள் கிடைக்கும். தொழிலில் பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். அக்கம் பக்கம் வீட்டார்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

அசுவினி : சுபச் செய்திகள் கிடைக்கும்.
பரணி : புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
கிருத்திகை : நம்பிக்கை அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

மனைகளின் மூலம் இலாபம் உண்டாகும். நினைத்த காரியம் ஈடேறும். தொழில் சம்பந்தமான முயற்சிகளில் புதிய அணுகுமுறையை கையாளுவீர்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான நாள். செய்தொழிலில் திருப்தியான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : இலாபம் உண்டாகும்.
ரோகிணி : நினைத்த காரியம் ஈடேறும்.
மிருகசீரிடம் : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

உயர்கல்விக்கான முயற்சிகள் நல்ல பலன்களை தரும். கடல் மார்க்க பயணங்களால் நன்மை உண்டாகும். பொருட்சேர்க்கை உண்டாகும். வெளிநாட்டு வேலைக்கான முயற்சிகள் ஈடேறும். பூமி விருத்திக்கான பணியில் இருந்த இடர்பாடுகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மிருகசீரிடம் : ஆதரவான நாள்.
திருவாதிரை : இலாபம் கிடைக்கும்.
புனர்பூசம் : சுபிட்சம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

எந்தவொரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். வீண் அலைச்சல்கள் உண்டாகும். கடன் தொல்லைகள் குறையும். அரசு அதிகாரிகளின் மூலம் சாதகமான நிலை ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் வந்தடையும். சுயதொழிலில் மேன்மையான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

புனர்பூசம் : சாதகமான நாள்.
பூசம் : மேன்மையான சூழல் அமையும்.
ஆயில்யம் : அலைச்சல்கள் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

கலை சார்ந்த அறிவுகள் மேம்படும். அரசாங்கத்தின் மூலம் ஆதாயம் கிடைக்கும். இறை வழிபாட்டில் மனம் ஈடுபடும். தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் இலாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மகம் : அறிவு மேம்படும்.
பூரம் : இலாபம் அடைவீர்கள்.
உத்திரம் : நிதானத்துடன் நடந்து கொள்ளவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொழிலில் இருந்து வந்த எதிர்ப்புகள் அடங்கும். எடுத்துச்செல்லும் உடைமைகள் மீது கவனம் வேண்டும். பழைய நினைவுகளால் மன வருத்தம் ஏற்படும். தாயின் ஆதரவினால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
அஸ்தம் : எதிர்ப்புகள் அடங்கும்.
சித்திரை : இலாபம் அடைவீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க காலதாமதமாகும். எதிர்பாராத தனவரவுகளின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பயணங்களால் புத்துணர்ச்சி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பாலின மக்களால் அனுகூலம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

சித்திரை : உதவிகள் கிடைக்க காலதாமதமாகும்.
சுவாதி : மகிழ்ச்சி உண்டாகும்.
விசாகம் : அனுகூலமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். வாக்குறுதிகளை தவிர்க்கவும். சுபச் செய்திகளால் சுபவிரயம் உண்டாகும். வாதத்திறமையால் பாராட்டப்படுவீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். பிறருக்கு தேவையான உதவிகளை செய்து மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

விசாகம் : அனுசரித்துச் செல்லவும்.
அனுஷம் : சுபவிரயம் உண்டாகும்.
கேட்டை : அனுகூலமான சூழல் அமையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். நீண்ட நாட்களாக தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நிலுவையில் இருந்த பணவரவுகள் வசூலாகும். சாதுர்யமான பேச்சுகளால் அனைவரையும் கவர்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : தெளிவு உண்டாகும்.
பூராடம் : கவனம் வேண்டும்.
உத்திராடம் : பணவரவு உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

எண்ணிய செயலை முடிப்பதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். வாகனங்களில் நிதானம் வேண்டும். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் தேவையற்ற வாதத்தை தவிர்க்கவும். எதிர்பார்த்த தனவரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். தொழில் சம்பந்தமான போட்டிகளை சமாளிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திராடம் : நிதானம் வேண்டும்.
திருவோணம் : வாதத்தை தவிர்க்கவும்.
அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் பொருளாதார உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய நபர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். பிள்ளைகளின் எண்ணமறிந்து செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அவிட்டம் : விருப்பங்கள் நிறைவேறும்.
சதயம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
பூரட்டாதி : திருப்தியான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். இளைய சகோதரர்கள் பலமாக இருந்து உதவுவார்கள். தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மனம் தெளிவு பெறும். வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும். நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்

பூரட்டாதி : புதிய எண்ணங்கள் பிறக்கும்.
உத்திரட்டாதி : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
ரேவதி : ஆசைகள் நிறைவேறும்.

•┈┈•❀??????❀•┈┈•