*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_மாசி 03_*
*_15.02.2019_*
*_வெள்ளிக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். செய்யும் செயல்களில் நிதானம் வேண்டும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். துணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர்கள். குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
அசுவினி : ஆசைகள் நிறைவேறும்.
பரணி : புரிதல் உண்டாகும்.
கிருத்திகை : தெளிவு பிறக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
குடும்பத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
கிருத்திகை : மதிப்பு அதிகரிக்கும்.
ரோகிணி : அறிமுகம் கிடைக்கும்.
மிருகசீரிடம் : செயல்வேகம் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
தடைபட்ட வேலைகளை செய்து முடிப்பீர்கள். உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் சில சூட்சமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாகும். எதிலும் பதற்றமின்றி செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மிருகசீரிடம் : எண்ணங்கள் ஈடேறும்.
திருவாதிரை : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
புனர்பூசம் : இடமாற்றம் சாதகமாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
செய்யும் வேலைகளில் சற்று கவனத்துடன் செயல்படவும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நன்மையளிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். உத்தியோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும்போது நிதானம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
புனர்பூசம் : கவனம் வேண்டும்.
பூசம் : அனுசரித்துச் செல்லவும்.
ஆயில்யம் : நிதானம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
சாதுர்யமாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். உறவினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நீண்ட கால நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். வியாபாரத்தில் நீங்கள் செய்யும் சில மாற்றங்களால் இலாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மகம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
பூரம் : மகிழ்ச்சியான நாள்.
உத்திரம் : மாற்றங்களால் இலாபம் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
பணம் மற்றும் நகையை கையாளும்போது கவனம் வேண்டும். திட்டமிட்டு செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
உத்திரம் : காரியசித்தி உண்டாகும்.
அஸ்தம் : முன்னேற்றமான நாள்.
சித்திரை : அனுசரித்துச் செல்லவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வீடு மற்றும் வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
சித்திரை : கலகலப்பான நாள்.
சுவாதி : மகிழ்ச்சி உண்டாகும்.
விசாகம் : திறமைகள் வெளிப்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
குடும்பத்தில் உள்ளவர்களிடம் அமைதியாக நடந்து கொள்ளவும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடுவதால் வீண் பழிச்சொல் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் கவனமாக இருக்கவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : சிந்தித்துச் செயல்படவும்.
அனுஷம் : வீண் பழிச்சொல் ஏற்படும்.
கேட்டை : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
கணவன், மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். நட்பு வட்டம் பெருகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் சாதகமாகும். உத்தியோகத்தில் இருந்த பழைய சிக்கல்கள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
மூலம் : கருத்து வேறுபாடுகள் விலகும்.
பூராடம் : அறிமுகம் கிடைக்கும்.
உத்திராடம் : சிக்கல்கள் குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தாய்வழி உறவினர்களின் வகையில் நன்மைகள் கிடைக்கும். ஆடை மற்றும் ஆபரணச்சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
திருவோணம் : நன்மைகள் உண்டாகும்.
அவிட்டம் : மதிப்பு அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் உண்டாகும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : கிளிப்பச்சை
அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.
சதயம் : அறிமுகம் கிடைக்கும்.
பூரட்டாதி : திருப்தியான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் ஈடேறும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்ப பொருளாதாரம் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
பூரட்டாதி : மகிழ்ச்சி உண்டாகும்.
உத்திரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.
ரேவதி : பொருளாதாரம் மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
