*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_தை 22_*
*_05.02.2019_*
*_செவ்வாய்க்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
புதிய நபர்களிடம் தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்க்கவும். செய்தொழில் புரிபவர்கள் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். எதிர்காலம் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். கல்வி பயில்வோரின் அறிவுக்கூர்மை வெளிப்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அசுவினி : முயற்சிகள் கைக்கூடும்.
பரணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
கிருத்திகை : அறிவுக்கூர்மை வெளிப்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
திருமணப்பேச்சு வார்த்தைகள் கைக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதங்களை தவிர்த்து அமைதியுடன் செயல்படவும். வியாபாரம் சம்பந்தமான கடனுதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : சுபமான நாள்.
ரோகிணி : முன்னேற்றம் உண்டாகும்.
மிருகசீரிடம் : உதவிகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
மாணவர்கள் கல்வி பயிலும் விதங்களில் மாற்றங்கள் ஏற்படும். போட்டிகளால் இலாபம் அடைவீர்கள். பங்காளிகளுக்கிடையேயான உறவுநிலை மேம்படும். பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். பணியில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிடம் : மாற்றங்கள் உண்டாகும்.
திருவாதிரை : உறவுநிலை மேம்படும்.
புனர்பூசம் : அனுசரித்துச் செல்லவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் உயரும். எண்ணிய பணியில் காலதாமதம் உண்டாகும். பொருளாதார மேன்மை உண்டாகும். உயர் அதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களால் அலைச்சல்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
புனர்பூசம் : பொறுப்புகள் உயரும்.
பூசம் : மேன்மை உண்டாகும்.
ஆயில்யம் : அலைச்சல்கள் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
பயணங்களில் கவனம் வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். புனித யாத்திரை செல்வதற்கான சூழல் அமையும். புதிய நபர்களின் நட்பால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : ஆதாயம் கிடைக்கும்.
பூரம் : புகழ் உண்டாகும்.
உத்திரம் : உயர்வான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
உயர் அதிகாரிகளிடம் நிதானத்தை கடைபிடிக்கவும். சொந்த பந்தங்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளில் சில காலதாமதம் ஏற்படும். இடமாற்றம் உண்டாகும். சிறுதூர பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஒற்றுமை மேலோங்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : மகிழ்ச்சி உண்டாகும்.
அஸ்தம் : காலதாமதம் ஏற்படும்.
சித்திரை : ஒற்றுமை மேலோங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
சாதுர்யமான பேச்சுகளால் இலாபம் அடைவீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சாதகமான சூழல் அமையும். மகான்களின் ஆசிகள் கிடைக்கும். ஆடைச்சேர்க்கை உண்டாகும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
சித்திரை : சாதகமான சூழல் அமையும்.
சுவாதி : திறமைகள் வெளிப்படும்.
விசாகம் : கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
திடீர் யோகத்தால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான சூழல் அமையும். பொருட்களை கையாளும்போது எச்சரிக்கையுடன் செயல்படவும். தாய்வழி உறவினர்களிடம் சற்று நிதானத்தை கடைபிடிக்கவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
விசாகம் : மகிழ்ச்சி உண்டாகும்.
அனுஷம் : உயர்வு உண்டாகும்.
கேட்டை : நிதானம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
புதிய முயற்சிகளில் சாதகமான நிலை உருவாகும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். மனைகளால் இலாபம் உண்டாகும். நண்பர்களுடன் பயணங்கள் மேற்கொண்டு கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்
மூலம் : புதிய எண்ணங்கள் தோன்றும்.
பூராடம் : முயற்சிகள் மேலோங்கும்.
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
பூர்வீக சொத்துகளால் சுப விரயம் உண்டாகும். தாயின் உதவியால் சேமிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். புதிய நபர்களால் தேவையில்லாத சிறு பிரச்சனைகள் ஏற்படும். பணியில் உள்ளவர்களுக்கு மேன்மை உண்டாகும். சாதுர்யமான பேச்சுகளால் இலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திராடம் : தேவைகள் நிறைவேறும்.
திருவோணம் : சேமிப்பு அதிகரிக்கும்.
அவிட்டம் : இலாபம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
உத்தியோகஸ்தரர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். வெளிநாட்டு தொழில் முயற்சிகளால் சாதகமான சூழல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் மேம்படும். தொழில் சம்பந்தமான வீண் அலைச்சல்கள் உண்டாகும். சுயதொழில் சம்பந்தமான முயற்சிகள் மேலோங்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அவிட்டம் : சாதகமான நாள்.
சதயம் : பணிச்சுமை அதிகரிக்கும்.
பூரட்டாதி : காரியசித்தி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
திருமணப்பேச்சு வார்த்தைகளில் சுபமான முடிவுகள் கிடைக்கும். கவலைகள் நீங்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழல் உண்டாகும். நீண்ட கால நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். கலைஞர்களுக்கு கீர்த்தி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
பூரட்டாதி : கீர்த்தி உண்டாகும்.
உத்திரட்டாதி : கவலைகள் நீங்கும்.
ரேவதி : முன்னேற்றம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
