“சேலம் பாலம் கிரியேஷன்” சார்பில் *ஆடுவோர் ஆடலாம் 2019* என்ற மாபெரும் நடன யுத்த நிகழ்ச்சி தெய்வீகம் திருமண மண்டபத்தில் 03.02.2019 மாலை 5 மணிக்கு நடைபெற்றது. நிகழ்ச்சியின் ஒருங்கினைப்பாளர்களான திருமதி.B.சர்மிளா சரவணன், திருமதி. கவிதா,  திருமதி. திலகவதி, திருமதி. சிட்டுகலா, திரு.மகேஷ்வரன் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். சிறப்பு விருந்தினர்களாகவும்,  நடுவர்களாகவும் ஈரோடு மகேஷ், மாகாபா ஆனந்த், ஜாக்லின், கண்ணன் சுந்தரம், கண்ணன் மற்றும் பல்வேறு மாணவ, மாணவிகள்,  பெற்றோர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 30 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான இறுதிச்சுற்று நிகழ்ச்சி வண்ண விளக்குகலுடன் கோளாகலமாக நடைபெற்றது. கடந்த ஐந்து வருடங்களில் கட்டுரை போட்டி, கவிதை போட்டி, பேச்சு போட்டி என பல்வேறு போட்டிகளை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நடத்தி அவர்களின் தனித்திறமையை வளர்த்து, பரிசளித்து, ஊக்கப்படுத்துவதையே  பாலம் கிரியேஷன் குறிக்கோளாக கொண்டுள்ளது. இதனால் மாணவ, மாணவிகளிடத்திலும், பெற்றோர்களிடத்திலும் பெறும் நன் மதிப்பை கொண்டுள்ளது.