*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_கார்த்திகை 23_*

*_09.12.2018_*
*_ஞாயிற்றுக்கிழமை_*

*_வரலாற்றில் இன்று_*

•┈┈•❀??????❀•┈┈•

*நிகழ்வுகள்*

•┈┈•❀??????❀•┈┈•

536 – பைசாந்தியத் தளபதி பெலிசாரியசு உரோம் நகரை ஊடுருவினான். கோத்திக்குப் படைகள் தலைநகரை விட்டு வெளியேறின.

1582 – பிரான்சில் கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. டிசம்பர் 9 இற்குப் பின்னர் நேரடியாக டிசம்பர் 20 இற்கு நாட்காட்டி மாற்றப்பட்டது.

1688 – மாண்புமிகு புரட்சி: ரெடிங் சமரில் வில்லியமின் படைகள் யாக்கோபுவின் படைகளைத் தோற்கடித்தன. இரண்டாம் யேம்சு நாட்டை விட்டு வெளியேறினான்.

1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானியப் படைகள் பெரும் பாலத்தில் நடந்த சமரில் தோல்வியடைந்தன. பிரித்தானியா விரைவில் வர்ஜீனியாவில் இருந்து வெளியேறியது.

1793 – நியூயோர்க் நகரின் முதலாவது நாளிதழ் “தி அமெரிக்கன் மினெர்வா” நோவா வெப்சுடரினால் வெளியிடப்பட்டது.

1835 – டெக்சசு இராணுவம் சான் அந்தோனியோவைக் கைப்பற்றியது.

1856 – ஈரானிய நகரம் புசேகர் பிரித்தானிய ஆக்கிரமிப்புப் படைகளிடம் வீழ்ந்தது.

1905 – பிரான்சில் அரசையும் கிறித்தவத் தேவாலயங்களையும் பிரிக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.

1911 – அமெரிக்காவில், டென்னிசி மாநிலத்தில், சுரங்க வெடிப்பில் 84 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

1917 – எருசலேம் போர் (1917): பிரித்தானியர் பாலத்தீனத்தின் எருசலேம் நகரைக் கைப்பற்றினர்.

1931 – இரண்டாவது எசுப்பானியக் குடியரசு அமைக்கப்பட்டது.

1937 – இரண்டாம் சீன-சப்பானியப் போர்: |யப்பானியப் படைகள் சீன நகரான நாஞ்சிங்கைத் தாக்கின.

1940 – இரண்டாம் உலகப் போர்: காம்ப்பசு நடவடிக்கை: பிரித்தானிய, மற்றும் இந்தியப் படைகள் இத்தாலியப் படையினரை எகிப்தில் தாக்கினர்.

1941 – இரண்டாம் உலகப் போர்: சீனக் குடியரசு, கியூபா, குவாத்தமாலா, பிலிப்பீன்சு ஆகியன செருமனி, யப்பான் மீது போரை அறிவித்தன.

1946 – இந்திய அரசியலமைப்பை வரைய இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் முதல் தடவையாகக் கூடியது.

1948 – இனப்படுகொலை குற்றத்தை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

1953 – ஜெனரல் எலக்ட்ரிக் தனது நிறுவனத்தில் பணியாற்றிய கம்யூனிஸ்டுகள் அனைவரையும் பணிநீக்கம் செய்தது.

1956 – கனடாவின் விமானம் ஒன்று பிரிட்டிசு கொலம்பியாவில் வீழ்ந்ததில் 62 பேர் உயிரிழந்தனர்.

1961 – பிரித்தானியாவிடம் இருந்து தங்கனீக்கா விடுதலை பெற்றது.

1971 – 1971 இந்திய-பாக்கிஸ்தான் போர்: பாக்கித்தானிய பாதுகாப்பை மீறி இந்திய வான்படை இந்தியத் தரைப்படைத் தொகுதியினரைத் தரையிறக்கியது.

1979 – பெரியம்மை தீ நுண்மம் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. மனித உயிர் கொல்லி நோயொன்று முற்றாக அழிக்கப்பட்டது இதுவே முதலாவதாகும்.

1986 – இந்தியைத் திணிக்கும் அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி உள்ளிட்ட 10 தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

1992 – அமெரிக்கப் படைகள் சோமாலியாவில் தரையிறங்கின.

1992 – வேல்ஸ் இளவரசர் சார்ல்ஸ், இளவரசி டயானா இருவரினதும் பிரிவினை அறிவிக்கப்பட்டது.

2003 – மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர், பல காயமடைந்தனர்.

2006 – மாஸ்கோவின் மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் சிக்கி 45 பேர் உயிரிழந்தனர்.

2016 – மடகாலித் தற்கொலைத் தாக்குதல்கள்: வடகிழக்கு நைஜீரியாவில் சந்தை ஒன்றில் பள்ளி மாணவிகள் இருவர் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 57 பேர் கொல்லப்பட்டனர், 177 பேர் காயமடைந்தனர்.

•┈┈•❀??????❀•┈┈•

*பிறப்புகள்*

•┈┈•❀??????❀•┈┈•

1579 – மார்டின் தெ போரஸ், பெருவின் புனிதர் (இ. 1639)

1594 – சுவீடனின் கஸ்டாவஸ் அடால்பஸ் (இ. 1632)

1608 – ஜான் மில்டன், ஆங்கிலேயக் கவிஞர், மெய்யியலாளர் (இ. 1674)

1742 – காரல் வில்லெம் சீலெ, சுவீடன்-செருமானிய வேதியியலாளர்

1868 – பிரிட்சு ஏபர், நோபல் பரிசு பெற்ற போலந்து-செருமானிய வேதியியலாளர் (இ. 1934)

1870 – ஐடா இசுகட்டர், இந்திய மருத்துவர், மதப்பரப்புனர் (இ. 1960)

1881 – ரிச்சர்ட் லயனல் ஸ்பிட்டெல், இலங்கை மருத்துவர், எழுத்தாளர் (இ. 1969)

1906 – கிரேசு ஹாப்பர், அமெரிக்க கணினியியலாளர் கோபால் நிரலாக்க மொழியை உருவாக்கியவர் (இ. 1992)

1913 – ஓமாயி வியாரவாலா, இந்தியப் புகைப்படக் கலைஞர் (இ. 2012)

1917 – கே. பி. ஜானகி அம்மாள், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், அரசியல்வாதி (இ. 1992)

1919 – வெ. தட்சிணாமூர்த்தி, இந்திய திரைப்பட இசையமைப்பாளர் (இ. 2013)

1919 – எ. கி. நாயனார், இந்திய இடதுசாரி அரசியல்வாதி (இ. 2004)

1927 – பி. எஸ். மணிசுந்தரம், இந்தியக் கல்வியாளர், கணினி அறிவியலாளர் (இ. 2013)

1930 – சுப. சதாசிவம், தமிழக எழுத்தாளர்

1934 – சூடி டென்ச், ஆங்கிலேய நடிகை

1936 – கிங்ஸ்லி சுவாம்பிள்ளை, இலங்கை கத்தோலிக்க ஆயர்

1943 – நேசமணி ஜோன், மலேசிய எழுத்தாளர்

1946 – சோனியா காந்தி, இத்தாலிய-இந்திய அரசியல்வாதி

1954 – ழான்-குளோடு சுன்கர், லக்ச்ம்பர்க் பிரதமர்

1978 – ஜெசி மெட்காஃப், அமெரிக்க நடிகர்

1981 – மார்டி ஃபிஷ், அமெரிக்க டென்னிசு வீரர்

1981 – தியா மிர்சா, இந்திய நடிகை

•┈┈•❀??????❀•┈┈•

*இறப்புகள்*

•┈┈•❀??????❀•┈┈•

1048 – அல்-பிருனி, பாரசீகக் கணிதவியலாளர் (பி. 973)

1669 – ஒன்பதாம் கிளமெண்ட் (திருத்தந்தை) (பி. 1600)

1937 – நில்சு குஸ்டாப் டேலன், நோபல் பரிசு பெற்ற சுவீடிய இயற்பியலாளர் (பி. 1869)

1932 – பேகம் ரோக்கியா, வங்காளதேச சமூகப் பணியாளர், நூலாசிரியர் (பி. 1880)

1979 – ஃபுல்டன் ஜான் ஷீன், அமெரிக்கப் பேராயர் (பி. 1895)

1989 – மதுரை சோமு, தமிழகக் கருநாடக இசைப் பாடகர் (பி. 1919)

1991 – பெரினிசு ஆபாட், அமெரிக்கப் புகைப்படக் கலைஞர் (பி. 1898)

1997 – சிவராம காரந்த், கன்னட எழுத்தாளர் (பி. 1902)

2006 – சு. வில்வரத்தினம் ஈழத்துக் கவிஞர் (பி. 1950)

•┈┈•❀??????❀•┈┈•

*சிறப்பு நாள்*

•┈┈•❀??????❀•┈┈•

விடுதலை நாள் (தன்சானியா, பிரித்தானியாவிடம் இருந்து 1961)

பன்னாட்டு ஊழலுக்கு எதிரான நாள்

•┈┈•❀??????❀•┈┈•