*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_கார்த்திகை 24_*

*_10.12.2018_*
*_திங்கட்கிழமை_*

*_வரலாற்றில் இன்று_*

•┈┈•❀??????❀•┈┈•

*நிகழ்வுகள்*

•┈┈•❀??????❀•┈┈•

1041 – பைசண்டைன் பேரரசி சோயி தனது வளர்ப்பு மகனை ஐந்தாம் மைக்கேல் என்ற பெயரில் பேரரசனாக்கினாள்.

1520 – மார்ட்டின் லூதர் தனது திருத்தந்தையின் ஆணை ஓலையின் பிரதியைத் தீயிட்டுக் கொளுத்தினார்.

1541 – இங்கிலாந்தின் எட்டாம் என்றியின் மனைவியும் அரசியுமான கத்தரீனுடன் தகாத உறவு வைத்திருந்தமைக்காக தோமசு கல்பெப்பர், பிரான்சிசு டெரெகம் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.

1655 – யாழ்ப்பாண ஆளுநர் “அன்டோனியோ டி மெனேசா” மன்னாரில் இருந்து கொழும்பு செல்லும் வழியில் முகத்துவாரம் என்னும் இடத்தில் சிறை பிடிக்கப்பட்டார்.

1684 – ஐசாக் நியூட்டன் புவியீர்ப்பு விதிகளின் கொள்கைகளில் எழுதிய கெப்லரின் விதிகளின் தீர்வுகள் அரச கழகத்தில் எட்மண்டு ஏலியினால் படிக்கப்பட்டது.

1799 – பிரான்சு மீட்டரை அதிகாரபூர்வ நீள அலகாக அறிவித்தது.

1807 – சென்னையில் நிலநடுக்கம் எற்பட்டது.

1817 – மிசிசிப்பி ஐக்கிய அமெரிக்காவின் 20வது மாநிலமாக இணைந்தது.

1868 – உலகின் முதலாவது சைகை விளக்குகள் லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனைக்கு வெளியே நிறுவப்பட்டன.

1898 – பாரிசு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டதை அடுத்து எசுப்பானிய அமெரிக்கப் போர் முடிவுக்கு வந்தது..

1901 – முதலாவது நோபல் பரிசுகள் வழங்கப்பட்டன.

1902 – அஸ்வான் அணை திறக்கப்பட்டது.

1902 – தாஸ்மேனியாவில் பெண்களுக்கு வாக்குரிமை வழக்கப்பட்டது.

1906 – அமெரிக்க அதிபர் தியொடோர் ரோசவெல்ட் உருசிய-சப்பானியப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தமைக்காக [[அமைதிக்கான அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார். இது ஒரு அமெரிக்கர் பெற்ற முதலாவது நோபல் பரிசாகும்.

1909 – செல்மா லோவிசா லேகர்லாவ் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதலாவது பெண் என்ற பெருமையைப் பெற்றார்.

1936 – இங்கிலாந்தின் எட்டாம் எட்வர்டு மன்னன் முடி துறப்பதாக அறிவித்தான்.

1941 – இரண்டாம் உலகப் போர்: மலாயாவுக்குக் கிட்டவாக ஐக்கிய இராச்சியத்தின் இரண்டு கடற்படைக் கப்பல்கள் சப்பானியர்களால் மூழ்கடிக்கப்பட்டது.

1941 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் படையினர் பிலிப்பீன்சை அடைந்தனர்.

1948 – மனித உரிமைகள் குறித்த அனைத்துலகப் பிரகடனத்தை ஐநா பொதுச் சபை அறிவித்தது. இந்நாள் உலக மனித உரிமைகள் நாள் ஆக அறிவிக்கப்பட்டது.

1949 – சீன உள்நாட்டுப் போர்: மக்கள் விடுதலை இராணுவம் செங்டூ மீதான தாக்குதலை ஆரம்பித்தது. சங் கை செக்கும் அவரது அரசும் சீனக் குடியரசுக்குப் பின்வாங்கினர்.

1953 – பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.

1963 – சன்சிபார் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.

1978 – அரபு-இசுரேல் முரண்பாடு: இசுரேல் பிரதமர் பெகின், எகிப்தியத் தலைவர் அன்வர் சாதாத் கூட்டாக அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றனர்.

1981 – தெற்காசியாவை அணுவாயுதமற்ற பகுதியாக அறிவிக்க பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஐநா பொது அவை ஏற்றுக் கொண்டது.

1984 – ஐக்கிய நாடுகள் பொதுச் சபை சித்திரவதைக்கு எதிரான ஐ.நா உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டது.

1984 – தென்னாபிரிக்க கருப்பின மதகுரு டெசுமான்ட் டுட்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.

1989 – மங்கோலியா கம்யூனிசத்தில் இருந்து மக்களாட்சிக்கு அமைதியாக மாற்றம் பெற்றது.

2006 – ஈழப்போர்: வாகரை, மாங்கேணியில் இலங்கைப் படையினரின் எறிகணைத் தாக்குதலில் 17 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

•┈┈•❀??????❀•┈┈•

*பிறப்புகள்*

•┈┈•❀??????❀•┈┈•

1815 – அடா லவ்லேஸ், ஆங்கிலேய கணிதவியலாளர் (இ. 1852)

1830 – எமிலி டிக்கின்சன், அமெரிக்கக் கவிஞர் (இ. 1886)

1851 – மெல்வில் தூவி, அமெரிக்க நூலகவியலாளர், தூவி வகைப்படுத்தலை உருவாக்கியவர் (இ. 1931)

1878 – ராஜாஜி, இந்திய அரசியல்வாதி, இந்தியாவின் 45வது ஆளுநர், எழுத்தாளர் (இ. 1972)

1891 – நெல்லி சாக்ஸ், நோபல் பரிசு பெற்ற செருமானிய-சுவீடிய எழுத்தாளர் (இ. 1970)

1902 – எஸ். நிஜலிங்கப்பா, இந்திய அரசியல்வாதி (இ. 2000)

1943 – மாணிக்க விநாயகம், தமிழகப் பின்னணிப் பாடகர், நடிகர்

1952 – சுஜாதா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2011)

1960 – கென்னத் பிரனா, ஆங்கிலேய நடிகர், இயக்குநர்

1960 – ரதி அக்னிகோத்ரி, இந்தியத் திரைப்பட நடிகை

1964 – ஜெயராம், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்

1969 – ஸ்டீபன் பில்லிங்டன், ஆங்கிலேய நடிகர்

1983 – சேவியர் சாமுவேல், ஆத்திரேலிய நடிகர்

1986 – மனோஜ் குமார், இந்தியக் குத்துச்சண்டை வீரர்

•┈┈•❀??????❀•┈┈•

*இறப்புகள்*

•┈┈•❀??????❀•┈┈•

1198 – இப்னு றுஷ்து, எசுப்பானிய வானியலாளர், இயற்பியலாளர், மெய்யியலாளர் (பி. 1126)

1896 – ஆல்பிரட் நோபல், சுவீடிய வேதியியலாளர், டைனமைட்டு கண்டுபிடித்தவர், நோபல் பரிசை தோற்றுவித்தவர் (பி. 1833)

1909 – சிகப்பு மேகம், அமெரிக்க பழங்குடித் தலைவர் (பி. 1822)

1960 – சிற்றம்பலம் கார்டினர், இலங்கைத் தொழிலதிபர், தயாரிப்பாளர் (பி. 1899)

1995 – எஸ். டீ. சௌலா, இந்திய அமெரிக்கக் கணிதவியலாளர் (பி. 1907)

2001 – அசோக் குமார், இந்திய நடிகர், பாடகர், தயாரிப்பாளர் (பி. 1911)

2006 – அகஸ்தோ பினோசெட், சிலியின் 30வது அரசுத்தலைவர் (பி. 1915)

2006 – மதன் லால் மேத்தா, இந்திய இயற்பியலாளர் (பி. 1932)

2013 – ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார், இந்திய அரசியல்வாதி (பி. 1946)

2016 – கல்வயல் வே. குமாரசுவாமி, ஈழத்துக் கவிஞர், கல்வியாளர் (பி. 1944)

2016 – வா. செ. குழந்தைசாமி, இந்தியப் பொறியியல் அறிஞர், கவிஞர் (பி. 1929)

•┈┈•❀??????❀•┈┈•

*சிறப்பு நாள்*

•┈┈•❀??????❀•┈┈•

மனித உரிமைகள் நாள்

•┈┈•❀??????❀•┈┈•