*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_கார்த்திகை 23_*
*_09.12.2018_*
*_ஞாயிற்றுக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணம் மாற்றமான சூழலை உருவாக்கும். சக ஊழியர்களிடம் உங்களின் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் இலாபம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
அசுவினி : உதவிகள் கிடைக்கும்.
பரணி : மாற்றமான நாள்.
கிருத்திகை : இலாபம் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
மனதில் தோன்றும் பலவிதமான சிந்தனைகளால் செயல்களில் காலதாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சந்திராஷ்டம தினம் என்பதால் புதிய ஒப்பந்தங்கள் சார்ந்த முடிவுகளில் நிதானம் வேண்டும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : காலதாமதம் உண்டாகும்.
ரோகிணி : உயர்வு உண்டாகும்.
மிருகசீரிடம் : அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
குடும்பத்தில் சுபச் செய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குழந்தைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாக்குவன்மையால் இலாபகரமான சூழல் உண்டாகும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பால் பொருளாதார பிரச்சனைகள் சற்று குறையும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மிருகசீரிடம் : மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
திருவாதிரை : முன்னேற்றம் ஏற்படும்.
புனர்பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். தொழிலில் இருந்த இன்னல்கள் குறையும். கலைஞர்களுக்கான வாய்ப்புகள் சாதகமாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகப்படுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : வாய்ப்புகள் அமையும்.
பூசம் : இன்னல்கள் குறையும்.
ஆயில்யம் : பாராட்டுகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
தொழில் சார்ந்த முயற்சிகள் மேலோங்கும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துகளின் மூலம் அனுகூலம் உண்டாகும். மனதில் நினைத்த எண்ணம் அனைத்தும் நிறைவேறும். வியாபாரத்தில் புதிய மாற்றங்களை செய்தால் எதிர்பார்த்த இலாபத்தை அடையலாம். கடன்கள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : முயற்சிகள் மேலோங்கும்.
பூரம் : அனுகூலமான நாள்.
உத்திரம் : விருப்பங்கள் நிறைவேறும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். வாக்குவன்மையால் எண்ணிய இலாபம் உண்டாகும். தொழில் திறமைகள் வெளிப்படும். கடல் சார்ந்த பயணங்களின் மூலம் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
அஸ்தம் : இலாபம் உண்டாகும்.
சித்திரை : திறமைகள் வெளிப்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
வியாபாரத்தில் முயற்சிக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோகத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : முன்னேற்றம் உண்டாகும்.
சுவாதி : கருத்து வேறுபாடுகள் மறையும்.
விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
வழக்குகளில் எண்ணிய வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். பொருளாதார பிரச்சனைகளில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
விசாகம் : வெற்றி கிடைக்கும்.
அனுஷம் : முன்னேற்றமான நாள்.
கேட்டை : இன்னல்கள் நீங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். தாய்மாமன் வகை உறவுகளால் ஆதாயமான பலன்கள் கிடைக்கும். தொழிலில் இதுவரை இருந்த பிரச்சனைகள் நீங்கும். தடைபட்ட சுப காரியங்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற ஊதியம் மற்றும் உயர்வு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்
மூலம் : ஆதாயம் உண்டாகும்.
பூராடம் : பிரச்சனைகள் நீங்கும்.
உத்திராடம் : மேன்மையான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
மந்தத்தன்மையால் செய்யும் செயல்களில் காலதாமதம் உண்டாகும். பணியில் மேலதிகாரிகளின் ஆதரவால் சில செயல்களை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகள் சற்று குறையும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திராடம் : எண்ணங்கள் ஈடேறும்.
திருவோணம் : நிதானம் வேண்டும்.
அவிட்டம் : பயணங்களால் மாற்றம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
எதிர்பார்த்த தனவரவுகளால் சாதகமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். இணையதளம் தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் இலாபம் அதிகரிக்கும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
அவிட்டம் : தனவரவு மேம்படும்.
சதயம் : பிரச்சனைகள் விலகும்.
பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நன்மை அளிக்கும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் வேண்டும். மன தைரியம் மேம்படும். தொழிலில் முன்னேற்றம் அடைவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மிதமான நீலம்
பூரட்டாதி : அலைச்சல்கள் உண்டாகும்.
உத்திரட்டாதி : நிதானம் வேண்டும்.
ரேவதி : மேன்மை உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
