*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_ஆவணி 06_*

*_22.08.2018_*
*_புதன்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம் :-*

தொழில் சம்பந்தமான புதிய முடிவுகளை எடுப்பதில் கவனத்துடன் இருக்கவும். வாகனப் பயணங்களில் மிகுந்த எச்சரிக்கை வேண்டும். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். போட்டிகளில் நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அசுவினி : அமைதி காக்கவும்.
பரணி : பயணங்களில் எச்சரிக்கை தேவை.
கிருத்திகை : நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம் :-*

புத்திரர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நிர்வாகத்தில் உங்களின் தனித்திறமைகள் வெளிப்படும். நீண்ட நாட்களாக மனதில் நினைத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
ரோகிணி : திறமைகள் வெளிப்படும்.
மிருகசீரிடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம் :-*

செயல்பாடுகளின் வேகம் அதிகரிக்கும். தாய் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். பொருள் சேர்ப்பதற்கான சாதகமான சூழல் அமையும். உங்களின் இலட்சியத்தை அடைவதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். மூலிகை சம்பந்தமான தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிடம் : சிந்தனைகள் மேலோங்கும்.
திருவாதிரை : இலாபகரமான நாள்.
புனர்பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம் :-*

மூத்த சகோதரர்களிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் குறையும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வாக்குறுதிகளால் கீர்த்தி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே உறவு நிலை மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
பூசம் : கீர்த்தி உண்டாகும்.
ஆயில்யம் : உறவு நிலை மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம் :-*

விவாதங்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். புதிய தொழில் முயற்சிகளால் சுப விரயம் உண்டாகும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். பிறருக்கு உதவும்போது கவனமாக இருக்க வேண்டும். பணப்புழக்கத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மிதமான நீலம்

மகம் : புதிய முயற்சிகள் கைகூடும்.
பூரம் : காரியசித்தி உண்டாகும்.
உத்திரம் : எச்சரிக்கையாக இருக்கவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி :-*

கால்நடைகளால் சில விரயம் ஏற்படும். எதிர்பார்த்த வங்கி கடனுதவிகள் சாதகமாக அமையும். புண்ணிய தலங்களுக்கான யாத்திரையை மேற்கொள்வீர்கள். வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திரம் : வீண் விரயம் ஏற்படும்.
அஸ்தம் : புனித யாத்திரை மேற்கொள்வீர்கள்.
சித்திரை : ஆசிர்வாதம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம் :-*

இளைய சகோதரர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். மனதில் தோன்றும் தேவையற்ற எண்ணங்களால் மனச்சோர்வு அடைவீர்கள். பொருட்களை கையாளும்போது கவனத்துடன் இருக்கவும். எதிர்பாலின மக்களிடம் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

சித்திரை : அமைதி காக்கவும்.
சுவாதி : கவனம் வேண்டும்.
விசாகம் : எச்சரிக்கையுடன் செயல்படவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம் :-*

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். கல்லூரி படிப்பிற்கான சுப விரயங்கள் உண்டாகும். புதுவித ஆராய்ச்சி எண்ணங்கள் தோன்றும். பிறருக்கு எடுத்துரைக்கின்ற பேச்சுகளால் நற்பலன் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : ஆதரவு கிடைக்கும்.
அனுஷம் : சுப விரயங்கள் உண்டாகும்.
கேட்டை : புதுவித ஆராய்ச்சி எண்ணங்கள் தோன்றும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு :-*

மூத்த சகோதரர்களால் சுப விரயம் உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்க காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

மூலம் : சுப விரயம் உண்டாகும்.
பூராடம் : பணிச்சுமை அதிகரிக்கும்.
உத்திராடம் : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம் :-*

உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வெளிநாடுகளுக்கான பயணங்களால் நன்மை உண்டாகும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். அறச்செயலுக்காக நன்கொடைகள் கொடுத்து மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : ஆதரவு கிடைக்கும்.
திருவோணம் : பயணங்களால் நன்மை உண்டாகும்.
அவிட்டம் : மனம் மகிழ்வீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம் :-*

புதிய நபர்களால் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். வாகனங்களால் இலாபம் உண்டாகும். உறவினர்களுக்கிடையே உறவு நிலை மேம்படும். பொதுக்கூட்டப் பேச்சுகளில் ஈடுபடுபவர்கள் கவனமாக நடந்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்

அவிட்டம் : பயணங்களால் இலாபம் கிடைக்கும்.
சதயம் : உறவு நிலை மேம்படும்.
பூரட்டாதி : சாதகமான சூழல் அமையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம் :-*

பணியில் மேன்மை அடைவதற்கான செயல்களை செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தொழிலில் கூட்டாளிகளால் சாதகமான சூழல் ஏற்பட்டு தனலாபம் அடைவீர்கள். வீண் அலைச்சல்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி: மேன்மையான நாள்.
உத்திரட்டாதி : பேச்சில் எச்சரிக்கை தேவை.
ரேவதி : வீண் அலைச்சல்கள் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•