*_?முத்தமிழ்?_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_ஆடி 28_*

*_13.08.2018_*
*_திங்கட்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம் :-*

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். செய்யும் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : எண்ணங்கள் ஈடேறும்.
பரணி : புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும்.
கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம் :-*

பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். தாய்வழி உறவினர்களிடமிருந்து சுபச் செய்திகள் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். தொழில் நிறுவனங்களை விரிவுப்படுத்துவதற்கான எண்ணங்கள் மேலோங்கும். எடுத்த வேலையை முடிப்பதில் சில தடைகள் வந்து நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : கவனம் வேண்டும்.
ரோகிணி : சுபச் செய்திகள் கிடைக்கும்.
மிருகசீரிடம் : தடைகள் வந்து நீங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம் :-*

குடும்பத்தில் உங்களின் வார்த்தைக்கு மதிப்பு கிடைக்கும். மனதிற்கு பிடித்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகளால் இலாபம் உண்டாகும். உத்தியோகஸ்தரர்களின் திறமைகள் வெளிப்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மிருகசீரிடம் : மதிப்பு கிடைக்கும்.
திருவாதிரை : உதவி செய்வீர்கள்.
புனர்பூசம் : இலாபம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம் :-*

உறவினர்களின் வருகை உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். இருப்பிடத்தை உங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றம் செய்வீர்கள். தொழிலில் மறைமுக எதிர்ப்புகள் வந்து போகும். வீட்டிற்குத் தேவையான மின்னணு சாதனங்களை வாங்குவதற்கான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

புனர்பூசம் : இலாபம் கிடைக்கும்.
பூசம் : மாற்றம் செய்வீர்கள்.
ஆயில்யம் : பொருள் வரவு உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம் :-*

உத்தியோகஸ்தரர்களுக்கு உழைப்பிற்கேற்ற பாராட்டு கிடைக்கும். தடைபட்ட செயல்கள் இனிதே நிறைவேறும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மகம் : பாராட்டு கிடைக்கும்.
பூரம் : ஆதரவு கிடைக்கும்.
உத்திரம் : வாய்ப்புகள் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி :-*

குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உறவினர்களை பற்றிய புரிதல் உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திரம் : பிரச்சனைகள் குறையும்.
அஸ்தம் : புரிதல் உண்டாகும்.
சித்திரை : ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம் :-*

செய்யும் செயல்களில் பதற்றமின்றி நிதானத்துடன் செயல்படவும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்லவும். மனதில் தோன்றும் புதிய எண்ணங்களால் குழப்பமான சூழல் அமையும். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

சித்திரை : நிதானத்துடன் செயல்படவும்.
சுவாதி : அனுசரித்து செல்லவும்.
விசாகம் : உதவிகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம் :-*

உறவினர்களுடன் வீண் பிரச்சனைகள் வந்து போகும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தொழிலில் கூட்டாளிகளிடம் அனுசரித்து செல்லவும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் திடீர் இலாபம் உண்டாகும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

விசாகம் : அனுசரித்து செல்லவும்.
அனுஷம் : அன்பு அதிகரிக்கும்.
கேட்டை : இலாபம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு :-*

வியாபாரம் சம்பந்தமான சில யுக்திகளை கற்றுக் கொள்வீர்கள். பணி சம்பந்தமான முக்கிய முடிவுகளை எடுப்பதில் சிந்தித்து செயல்படவும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மூலம் : புதிய யுக்திகளை கற்றுக் கொள்வீர்கள்.
பூராடம் : சிந்தித்து செயல்படவும்.
உத்திராடம் : தீர்வு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம் :-*

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் உங்களின் கருத்துகளுக்கு மதிப்பு கிடைக்கும். தந்தையிடம் கனிவுடன் நடந்து கொள்ளவும். உறவினர்கள் உங்களை புரிந்துக் கொள்வார்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : ஆதரவு கிடைக்கும்.
திருவோணம் : செல்வாக்கு உயரும்.
அவிட்டம் : கனிவுடன் நடந்து கொள்ளவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம் :-*

வியாபாரத்தில் மத்தியமான தனவரவு கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு வேலைப்பளு குறையும். அனைவரிடமும் கோபத்தை விடுத்து நிதானத்துடன் செயல்படவும். நெருக்கமானவர்களின் மூலம் சில மனக்கசப்புகள் உண்டாகும். வாகனப் பயணங்களில் மிகுந்த கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : வேலைப்பளு குறையும்.
சதயம் : நிதானத்துடன் செயல்படவும்.
பூரட்டாதி : மனக்கசப்புகள் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம் :-*

சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தரர்களின் நிர்வாகத்திறமைகள் வெளிப்படும். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

பூரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.
உத்திரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.
ரேவதி : அன்பு பெருகும்.

•┈┈•❀??????❀•┈┈•