சேலத்தில் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதியில் சுய உதவிக் குழுக்கள் மூலம் நடத்தப்படும் 584 நியாய விலை கடைகளை தமிழக அரசே எடுத்து நடத்தி அதில் பணிபுரியும் பணியாளர்களை ஊதியம் வழங்க ஆவணம் செய்ய வேண்டும் என்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் ,மாநில தலைவர் ஜெயச்சந்திர ராஜா, மாநில செயலாளர்கள் பழனிசாமி கோவிந்தராஜ் மற்றும் டாஸ்மார்க் பணியாளர் சங்க துணை செயலாளர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.