சென்னை: கோவை மாநகர காவல்துறை கடமையில் இருந்து தவறிவிட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டினார். கோவையில் வன்முறை வெடித்ததற்கு போலீசின் அலட்சியமே காரணம் என ராமதாஸ் தெரிவித்தார். சசிகுமார் கொலையில் தண்டிக்கப்பட வேண்டியது கொலையாளிகளே தவிர, அப்பாவி மக்கள் அல்ல என அவர் கூறினார். மேலும் கோவை வளர்ச்சிக்கான நகரமாக திகழ வேண்டும் என்றும் ராமதாஸ் கருத்து தெரிவித்தார்.
