சாம்சங் நிறுவனத்திற்கு இது போதாத காலம். அவர்கள் பெரும் விளம்பரத்திற்கு இடையே வெளியிட்ட சாம்சங் நோட் 7 மொபைல் பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளானது. சிங்கப்பூர் – சென்னை விமானத்தில் இன்று காலை திடீரென ஒருவரது சாம்சங் கேலக்சி நோட்-2 தீப்பிடித்து எரிந்தது. ஏற்கனவே இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் சாம்சங் கேலக்சி 7 மாடல் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று அனைத்து சாம்சங் கேலக்சி நோட்களையும் இந்திய விமானப் போக்குவரத்துத்துறை இயக்குநரகம் தடை விதித்துள்ளது.