சேலம்: சேலம், ஜலகண்டாபுரத்தில், செப்., 16ம் தேதி, அமைச்சர் இடைப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற கூட்டத்தில், மலையம்பாளையத்தை சேர்ந்த, ஆனந்தன் என்ற குட்டி என்பவர், பாலீத்தின் பையில், பெட்ரோலை நிரப்பி, கூட்ட மேடை முன் உள்ள, மைக் செட் உபகரணங்கள் மீது வீசினார். இதுதொடர்பாக, ஆனந்தன் உள்பட ஏழு பேரை, போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த, மலையம்பாளையத்தை சேர்ந்த யுவராஜ், 30, மேகநாதன், 30, இன்பநாதன், 30, இளங்கோ, 25, வெங்டேஷ், 25, அய்யப்பன், 26 ஆகியோர், சேலம் ஜே.எம்.எண்-5ல், நேற்று சரண் அடைந்தனர். மாஜிஸ்திரேட் கணேசன், அவர்களை, செப்., 26ம் தேதி வரை, சிறை காவலில் வைக்க உத்தரவிட்டார்.
